பக்கம் எண் :

61

2. ‘உடன்’ அல்லது ‘ஓடு’ என்னும் வேற்றுமை
உருபு இணைந்த பெயர்ச்சொற்களின் பின்
வரும்போது சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) பிடியுடன்கூடிய கத்தி
    (ஆ) நகைச்சுவையோடு கூடிய பேச்சு

2.54 கூடும்

நிகழ்வதற்கான வாய்ப்பைக் குறிப்பிடும்
வினைமுற்றாக வரும்போது சேர்த்து எழுத
வேண்டும்.

    (அ) அவர் வீட்டில் இருக்கக்கூடும்.
    (ஆ) ஆற்றில் வெள்ளம் வரக்கூடும்.

2.55 கொண்டு

‘ஆல்’ என்னும் வேற்றுமை உருபுக்கு
இணையாக (சொல்லுருபாக) வரும்போது
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) ஊசிகொண்டு தைத்தல்
    (ஆ) ஏர்கொண்டு உழுதல்
 
  2.56 தக்க

‘செ(ய்)ய’ போன்ற வினையெச்சத்தின் பின்
இடம்விட்டு எழுதப்படுகிறது.

    (அ) போற்றத் தக்க மனிதர்
    (ஆ) காணத் தக்க இடங்கள்

2.57 தகாத

இது தனித்தே எழுதப்படுகிறது.

பேசத் தகாத வார்த்தைகள்