பக்கம் எண் :

60

      கீழ வாசல்
    கீழை நாடுகள்
 
2.50அ குறித்து, குறித்த

    காண்க: 1.5.1அ

    விழாகுறித்து
2.50ஆ குறித்து, குறித்த

    காண்க: 1.5.1ஆ

    விழாவைக் குறித்து
 
2.51அ கூட

‘உம்’ என்ற இடைச்சொல்லுக்கு
இணையாகவும் ‘ஓடு’ என்ற வேற்றுமை
உருபுக்கு இணையாகவும் பயன்படுத்தும்
போது சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) ஒரு சொட்டுத் தண்ணீர்கூட
    (=தண்ணீரும்) குடிக்கவில்லை.
    (ஆ) உன்கூட (=உன்னோடு)
    நானும் வருகிறேன்.
 
2.51ஆ கூட

‘கூடுதலாக’ என்ற பொருளில்
பயன்படுத்தும்போது இதை இடம்விட்டு
எழுதவேண்டும்.

    (அ) செடிக்குக் கூடத் தண்ணீர் ஊற்று.
    (ஆ) சாம்பாரில் உப்பு கூடப்
    போட்டுவிட்டாய்.


 
  2.52 கூடாது

இதை இடம்விட்டு எழுத வேண்டும்.
    (அ) அங்கே போகக் கூடாது.
    (ஆ) அவரோடு பேசக் கூடாது.
    (இ) அவ்வாறு எண்ணுதல் கூடாது.
    (ஈ) அதிக விலைக்கு விற்பது கூடாது.
 
2.53 கூடிய

1. ‘செ(ய்)ய’ போன்ற வினையெச்சத்தின் பின்
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) கலவரம் ஏற்படக்கூடிய சூழ்நிலை
    (ஆ) உதவக்கூடிய நண்பர்