பக்கம் எண் :

59

குறிப்பிடும் சொற்களோடும் இவை சேர்த்தே
எழுதப்படுகின்றன.

    நூற்றுக்கணக்கில்
    ஆயிரக்கணக்காக
    லட்சக்கணக்கான
    மணிக்கணக்காக
    மாதக்கணக்கில்
    படிக் கணக்கில்
    டஜன் கணக்கில்
    லிட்டர் கணக்காக




 
  2.47 காட்டிலும்

ஒப்புப் பொருளைக் குறிக்கும் இந்தச்சொல்
தனித்தே எழுதப்படுகிறது.

    (அ) அவர்கள் நம்மைக் காட்டிலும் வசதி
    படைத்தவர்கள்.
    (ஆ) அவனோடு பேசுவதைக் காட்டிலும்
    பேசாமலிருப்பது மேல்.
 
2.48அ கீழ்

    1. காண்க: 1.5.1அ
    என்கீழ்

2. ‘கீழ்’ என்பது ‘அடிப்பகுதி’, ‘தாழ்மை’,
‘கிழக்கு’ ஆகிய பொருளில் முதல் சொல்லாக
இருக்குமானால் அடுத்து வரும் சொல்லோடு
சேர்த்தே எழுதப்படுகிறது.

    கீழ்த்தாடை
    கீழ்நிலை
    கீழ்த்திசை
 
2.48ஆ கீழ்

    காண்க: 1.5.1 ஆ
    பெட்டியின் கீழ்









 
  2.49 கீழ, கீழை

இவை இடம்விட்டு எழுதப்படுகின்றன.