பக்கம் எண் :

58

    குப்குப்பென்று புகை
    வருவதேன்/வருவானேன்?

2.44 ஒரு

1. ‘ஒவ்வொருவருக்கும்/
ஒவ்வொன்றுக்கும் ஒன்று...’ என்னும் பொருள்
தரக்கூடிய அமைப்பில் ‘ஒரு’ என்பதைச்
சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) ஆளுக்கொரு வீடு
    (ஆ) விரலுக்கொரு மோதிரம்
    (இ) வீட்டுக்கொரு மரம்

2. ‘இந்தத் தன்மையானது என்று கூற
முடியாத ...’ என்னும் பொருள் தரக்கூடிய
அமைப்பில் ‘அப்படி’, ‘இப்படி’, ‘எப்படி’
என்பனவற்றோடு ‘ஒரு’ என்பதைச் சேர்த்து எழுத வேண்டும்.

    (அ) அப்படியொரு வலி !
    (ஆ) இப்படியொரு ஆளைப் பார்த்ததே
    இல்லை.
    (இ) எப்படியொரு நாடகமாடினார்!

2.45 ஒழிய


‘செய்தால்’ போன்ற (ஆல் விகுதி)
வினையெச்சத்தோடு சேர்த்து எழுத
வேண்டும்.

அவர் நேராக வந்தாலொழிய இது
நடக்கப்போவதில்லை.
 
 
2.46 அ கணக்கில், கணக்காக, கணக்கான

பெரும் தொகை எண்களைக் குறிப்பிடும்
சொற்களோடும் காலப் பகுப்புகளைக்
 
2.46ஆ கணக்கில், கணக்காக

அளவைகளைக் குறிக்கும் சொற்களின் பின்
இவை இடம்விட்டு எழுதப்படுகின்றன.