(அ) வேறுவேறு மதத்தவரெனினும் இந்நாட்டவரே. (ஆ) புயல் வீசியது; எனினும் மழை பெய்யவில்லை -> புயல் வீசியதெனினும் மழை பெய்யவில்லை. | |
| 2.41 ஏற்ப ‘இணங்க’ என்னும் பொருளில் ‘கு’ உருபு ஏற்ற சொற்களின் பின் இடம்விட்டு எழுதப்படுகிறது. கேட்டுக்கொண்டதற்கு ஏற்பப் பணம் அனுப்பிவைத்தார். 2.42 ஏற்ற ‘தகுந்த’, ‘பொருத்தமான’ என்னும் பொருளில் இடம்விட்டு எழுதப்படுகிறது. (அ) உழைப்புக்கு ஏற்ற ஊதியம் (ஈ) படிப்புக்கு ஏற்ற வேலை (இ) மீனாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை |
2.43 ஏன் 1. ‘கு’ வேற்றுமை உருபு ஏற்ற பெயர்ச் சொல்லுடன் ‘எதற்கு’ என்ற பொருளில் பயன் படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும். (அ) நமக்கேன் இந்த ஊர் வம்பெல்லாம்? (ஆ) நடிகருக்கேன் கோபம் வருகிறது? 2. சில வினை வடிவங்களோடு சேர்த்து எழுத வேண்டும். | |