3. (வியப்பை வெளிப்படுத்தும்) ‘என்ன’ என்ற சொல்லுடன் இயற்கையின் எழிலை என்னவென்று சொல்வேன்! 2.38 என்ன கேள்வியாக இல்லாமல் ‘ஒன்றும் இல்லை’ என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும்போது இதைச் சேர்த்து எழுத வேண்டும். (அ) நமக்கென்ன என்று இருந்துவிட முடியாது. (ஆ) நல்ல நாவலை எல்லாரும் பாராட்டிப் பேசுவதில் வியப்பென்ன! 2.39 என 1. ‘போன்று’ என்னும் பொருளில் பயன்படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும். (அ) புலியெனப் பாய்ந்தான். (ஆ) மேடையில் இடியென முழங்கினார். 2. ‘என்று’ என்பதற்குப் பதிலாக வரும்போது சேர்த்து எழுத வேண்டும். (காண்க: 2.37: 1,2) (அ) குருவி கீச்கீச்செனக் கத்திற்று. (ஆ) உனக்கென வாங்கிய சட்டை 2.40 எனினும் ‘ஆயினும்’ என்பது போல் சேர்த்து எழுத வேண்டும். | | | |
|
|