பக்கம் எண் :

90

17. முதல் சொல்லின் இறுதி எழுத்து ண்

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

மண்+குடம்=மண்குடம்/
மட்குடம்

மண்+பானை = மண் பானை

க,ச,த,ப

 

 

 

 

‘ண்’

மாறாமல் வருவதே மிகுதி

 

‘மண் குடம்’ என்பதே
தற்போது வழக்காக
உள்ளது. ‘ண்’, ‘ட்’ என
மாறுவது சில
கலைச்சொற்களில்
காணப்படுகிறது. (எ-டு
கட்புலன்).
ஆண்+கள்=ஆண்கள்

கண்+கள்=கண்கள்

தூண்+கள்=தூண்கள்

-கள்

‘ண்’

மாறாது

 

‘-கள்’ பன்மை விகுதி.
விண்+நோக்கி=விண்ணோக்கி

‘ந்’, ‘ண்’ என மாறும்

இந்த மாற்றம் குறைவாகவே
காணப்படுகிறது. ‘விண்
நோக்கி’ என்று பிரித்து
எழுதுவதே மிகுதி.
‘வெண்ணிறம் (வெண்+
நிறம்) என்பது ஒரு சொல்
போல் சேர்த்து
எழுதப்படுகிறது.
பெண்+ஆசை=பெண்ணாசை

விண்+உலகம்=விண்ணுலகம்

உயிரெழுத்து

‘ண்’

இரட்டிக்கும்

முதல் சொல்
ஓரசையாகவும் அதில்
வரும் உயிர் குறிலாகவும்
இருந்தால் இரட்டிக்கும்.

18. முதல் சொல்லின் இறுதி எழுத்து ணு

காண்க: ‘உ’