பக்கம் எண் :

92

22. முதல் சொல்லின் இறுதி எழுத்து ம்

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

 

மனம்+கலங்கு=
மனங்கலங்கு

ணூடும்+சொல்=
கடுஞ்சொல்

மாதம்+தோறும்=
மாதந்தோறும்

க, ச, த

 

‘ம்’

இறுதி ‘ங்’, ‘ஞ்’, ‘ந்’ என்று மாறலாம்

‘மனம் கலங்கு’, ‘கடும்
சொல்’, ‘மாதம்தோறும்’
என மாற்றம் எதுவும்
இல்லாமலும்
எழுதப்படுகின்றன.
நிலம்+கள்=நிலங்கள்

-கள்

‘ம்’, ‘ங்’ என மாறும் ‘-கள்’ பன்மை விகுதி.
மரம்+கிளை=
மரக் கிளை

சங்கம்+செய்யுள்=
சங்கச்செய்யுள்

சட்டம்+திருத்தம்=
சட்டத் திருத்தம்

நாகரிகம்+செயல்=
நாகரிகச் செயல்

மாநகரம்+பேருந்து=
மாநகரப்பேருந்து

காலம்+சக்கரம்=
காலச் சக்கரம்

க,ச,த,ப

‘ம்’

மறைந்து ஒற்று மிகும்

வேற்றுமை உறவில்
அல்லது அடை ஏற்ற
நிலையில் அல்லது
உவமிக்கும் வகையில் இரு
பெயர்ச்சொற்கள்
இணையும்போது ஒற்று
மிகும். (‘சங்ககாலம்’
என்பதில் ஒற்று
மிகுவதில்லை.)
குலம்+முறை=குல முறை

திருமணம்+வாழ்த்து=
திருமண

வாழ்த்து

மோப்பம்+நாய்=
மோப்ப நாய்

ம,வ,ந

‘ம்’ மறையும்

 
மாநிலம்+முழுவதும்=மாநிலம் முழுவதும்

‘ம்’

மறைவதில்லை

வேற்றுமைத்

தொகையாக இல்லாதபோது ‘ம்’ மறைவதில்லை.

பெரும்+பங்கு=
பெரும் பங்கு

மூன்றாம்+பிறை=
மூன்றாம்பிறை

‘ம்’

மறைவ தில்லை

 
அகம்+இருள்=
அகவிருள்

புறம்+இதழ்=
புறவிதழ்

உயிரெழுத்து

‘ம்’

மறைந்து ‘வ்’ இடையில் வரும்

‘ம்’ மறைந்து உடம்படுமெய்
‘வ்’ வருதல்
கலைச்சொற்களில்
மிகுதியாகக்
காணப்படுகிறது.
சரித்திரம்+ஆசிரியர்=
சரித்திரஆசிரியர்

வெங்காயம்+

உற்பத்தி=
வெங்காயஉற்பத்தி

உயிரெழுத்து

‘ம்’

மறையும்

‘ம்’ மறைந்தாலும் இந்தத்
தொடர்கள்
உடம்படுமெய்யோடு
சேர்த்து
எழுதப்படுவதில்லை.