பக்கம் எண் :

93

மாநிலம்+அளவில்=
மாநில அளவில்

குற்றம்+அனைத்தும்=
குற்றம் அனைத்தும்

உயிரெழுத்து   வேற்றுமைத்

தொகையாக இல்லாத
சொற்களில் ‘ம்’ சிலவற்றில் மறைந்தும் சிலவற்றில் மறையாமலும் வரும்.

ஆயிரம்+ஆயிரம்=
ஆயிரமாயிரம்
உயிரெழுத்து உயிர்மெய்யாக எழுதப்படுகிறது ‘ஆயிரம் ஆயிரம்’, ‘ஆயிரம் ஆண்டுகள்’
என்று எழுதப்படுவதும் உண்டு.

23. முதல் சொல்லின் இறுதி எழுத்து ய்

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

 

பேய்+காற்று=
பேய்க் காற்று

வாய்+சொல்=
வாய்ச் சொல்

பொய்+தூக்கம்=
பொய்த் தூக்கம்

தாய்+பாசம்=
தாய்ப் பாசம்

க,ச,த,ப

 

 

 

 

மிகும்

 

 

 

வேற்றுமை உறவில்
அல்லது அடை ஏற்ற நிலையில் இரு
பெயர்ச்சொற்கள் இணையும்போது ஒற்று மிகும்.

 

போய்+சேர்= போய்ச் சேர்

நன்றாய்+தெரிகிறது=
நன்றாய்த் தெரிகிறது

ஊர்ஊராய்+திரிந்து=
ஊர்ஊராய்த் திரிந்து

க,ச,த,ப

மிகும்

‘ய்’ என்பதில் முடியும்
வினையெச்சத்தின் பின்பும்
‘-ஆய்’ வினையடை விகுதி
சேர்ந்த சொல்லின் பின்பும்
ஒற்று மிகும்.
காய்+கனி=காய்கனி

தாய்+சேய்=
தாய்சேய்

தாய்+தந்தை=
தாய்தந்தை

பாய்+படுக்கை=
பாய்படுக்கை

க,ச,த,ப

மிகாது

‘காயும் கனியும்’ ‘தாயும் சேயும்’ என்பதில் ‘உம்’ இல்லாமல் (உம்மைத்தொகையாக) வரும்போது ஒற்று மிகாது.
நாய்+கள்=நாய்கள்

பொய்+கள்=பொய்கள்

-கள்

‘க்’

மிகாது

‘-கள்’ பன்மை விகுதி.
மெய்+அன்பு=மெய்யன்பு

பொய்+ஆகு=பொய்யாகு

உயிரெழுத்து

‘ய்’

இரட்டிக்கிறது

முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்தால் இரட்டிக்கும்.