பக்கம் எண் :

94

24. முதல் சொல்லின் இறுதி எழுத்து ர்

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

 

தண்ணீர்+குழாய்=
தண்ணீர்க் குழாய்

தயிர்+சோறு=தயிர்ச்சோறு

உயிர்+தோழன்=
உயிர்த் தோழன்

நகர்+பகுதி=நகர்ப் பகுதி

வெளிர்+பச்சை=
வெளிர்ப் பச்சை

திடீர்+புரட்சி=திடீர்ப் புரட்சி

க,ச,த,ப

 

 

 

 

 

மிகும்

வேற்றுமை உறவில் அல்லது
அடை ஏற்ற நிலையில் இரு
பெயர்ச்சொற்கள்
இணையும்போது ஒற்று
மிகும். (‘தயிர் சாதம்’
என்பதில் ஒற்று
மிகுவதில்லை.)
வயதுவந்தோர்+கல்வி=
வயது வந்தோர் கல்வி

சிறுவர்+பள்ளி=
சிறுவர் பள்ளி

க,ச,த,ப

மிகாது

மைனர் பையன். ரப்பர்
தோட்டம் போன்ற
ஆங்கிலம்-தமிழ் கலவைத்
தொடர்களிலும் ஒற்று
மிகுவதில்லை.
உயர்+குடி=உயர்குடி

வளர்+தமிழ்=வளர்தமிழ்

க,ச,த,ப

மிகாது

முதல் சொல் வினையடியாக
இருக்கும் கூட்டுச்சொல்லில்
(வினைத்தொகையில்) ஒற்று
மிகாது.

25. முதல் சொல்லின் இறுதி எழுத்து ரு

காண்க: ‘உ’