பக்கம் எண் :

95

26. முதல் சொல்லின் இறுதி எழுத்து ல்

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

 

நெல்+கதிர்=நெற்கதிர்

கல்+சிலை=கற்சிலை

நெல்+பயிர்=நெற்பயிர்

பால்+குடம்=பாற்குடம்

க,ச,த,ப

 

‘ல்’, ‘ற்’ என மாறுகிறது தற்காலத் தமிழில் சில
கூட்டுச் சொற்களில் ‘ல்’, ‘ற்’
என மாற்றம் அடைகிறது.
முதல்+கடவுள்=
முதல் கடவுள்/முதற்கடவுள்

சொல்+பயிற்சி=
சொல் பயிற்சி/சொற்பயிற்சி

கல்+குவியல்=கற்குவியல்

சொல்+செட்டு=சொற்செட்டு

க,ச,த,ப

‘ல்’, ‘ற்’ என மாறலாம் சில கூட்டுச்சொற்கள்
இயல்பாகவும் சந்தி
மாற்றத்துடனும்
எழுதப்படுகின்றன.
கலைச்சொல்+தொகுதி=
கலைச்சொல் தொகுதி

முதல்+பாடம்=முதல் பாடம்

பால்+பாத்திரம்=
பால் பாத்திரம்

க,ச,த,ப

‘ல்’, ‘ற்’ என மாறுவ

தில்லை

சில கூட்டுச்சொற்களில் ‘ல்’, ‘ற்’ என மாறுவதில்லை.
ஏற்றால்+போல்=
(கைக்கு) ஏற்றாற் போல்

தகுந்தால்+போல்=
(அவருக்கு)தகுந்தாற் போல்

போல்

‘ல்’, ‘ற்’ என மாறும் ‘ஆல்’ விகுதி பெற்ற சில
வினையெச்சங்களின் பின் ‘போல்’ என்னும் சொல் வரும்போது ‘ல்’, ‘ற்’ என மாறும்.
பதித்தால்+போல்=
(முத்து) பதித்தால் போல்

பெய்தால்+போல்=
(மழை)பெய்தால்போல்

போல்

‘ல்’ மாறுவதில்லை ‘பதித்தது போல்’, ‘பெய்தது
போல்’ என்ற வடிவங்களில்
வருவதே மிகுதி. எனவே,
‘பதித்தால்போல்’, ‘பெய்தால்
போல்’ என்பவற்றில் ‘ல்’,
‘ற்’ என மாற்றம் அடைவது
குறைந்தே காணப்படுகிறது.
சொல்+தொடர்=சொற்றொடர்

சொல்+தொகை=
சொல் தொகை

  ‘சொற்றொடர்’ என்ற
கலைச்சொல் ‘சொல்
தொடர்’ என்று
எழுதப்படுவதில்லை.
மனதில்+கொண்டு=
மனதில் கொண்டு

ஆசிரியரால்+பதிப்பித்து=
ஆசிரியரால் பதிப்பித்து

 

க,ச,த,ப

‘ல்’

மாறுவதில்லை

‘-இல்’, ‘-ஆல்’ ஆகிய
வேற்றுமை உருபுகளின் பின்
‘ல்’, ‘ற்’ என மாறுவதில்லை.