பக்கம் எண் :

96

 

எடுத்துக்காட்டு

 

தொடரும் சொல், விகுதி

சந்தி

 

 

விளக்கம்

 

கேட்காமல்+கொடு=
கேட்காமல் கொடு

காணாமல்+போ=
காணாமல் போ

க,ச,த,ப

‘ல்’

மாறுவதில்லை

எதிர்மறை
வினையெச்சங்களின் பின்
‘ல்’, ‘ற்’ என மாறுவதில்லை.
கல்+கள்=கற்கள்

வயிரக்கல்+கள்=
வயிரக்கற்கள்

சொல்+கள்=சொற்கள்

வசைச்சொல்+கள்=
வசைச்சொற்கள்

பல்+கள்=பற்கள்

பால்பல்+கள்=
பால்பகற்கள்

-கள்

‘ல்’, ‘ற்’ என மாறும் ‘ல்’ என்பதில் முடியும்
சொல் ஓரசையாகவும் அந்த
அசையில் உள்ள
உயிரெழுத்து குறிலாகவும்
இருந்தால் பன்மை
விகுதியாகிய ‘-கள்’
இணையும்போது ‘ல்’, ‘ற்’
என மாறும். அந்த
ஓரசைச் சொற்களை
இறுதியாக உடைய பிற
சொற்களும் இவ்வாறே
மாறும்.
சில்+கள்=(சிலிக்கான்) சில்கள்/சில்லுகள்

செல்+கள்=செல்கள்

-கள்

‘ல்’

மாறுவதில்லை

அறிவியலில் ஆங்கிலச்
சொற்களின் பின் பன்மை
விகுதி இயல்பான
முறையிலேயே சேர்கிறது.
சொல்+அடுக்கு=சொல்அடுக்கு/சொல்லடுக்கு

சொல்+ஆராய்ச்சி=
சொல் ஆராய்ச்சி/சொல்லாராய்ச்சி

பல்+இடுக்கில்=பல் இடுக்கில்/பல்லிடுக்கில்

உயிரெழுத்து

‘ல்’

இரட்டித்தும் வரும்

இரட்டித்த நிலையில்
சேர்த்தும் இயல்பாக
இருக்கும்போது பிரித்தும்
எழுதப்படுகின்றன.
கல்+ஆட்டம்=கல்லாட்டம்

-ஆட்டம்

‘ல்’

இரட்டிக்கிறது

சேர்த்து எழுதப்படுகிறது.

27. முதல் சொல்லின் இறுதி எழுத்து வு

காண்க: ‘உ’