பக்கம் எண் :

தொகைகள்16கி. செம்பியன்

கால்பந்து > காலால் உதைபடும் பந்து
கீரைவடை > கீரையால் ஆன வடை
குதிரைப்படை > குதிரையால் ஆன படை (இதனை
ஆறாம் வேற்றுமைத் தொகையாக,
ஒன்றன் கூட்டத் தற்கிழமையாகக் கொண்டு
குதிரையது படை எனவும் குறிப்பிடலாம்.)
குருவிக்கூடு > குருவியால் கட்டப்பட்டகூடு
(குருவியினது கூடு எனவும் விரிக்கலாம்)
கைத்தறித்துணி > கைத்தறியினால் நெய்யப்பட்ட துணி
கைப்பந்து > கையால் ஆடும் பந்து
கைம்மைத்துயர் > கைம்மையால் வந்த துயர்
கைராட்டை > கையால் இயக்கப்படும் ராட்டை
கைவினை > கையால் ஆகும் வினை (காரியம்)
கொலை வழக்கு > கொலையால் வந்த வழக்கு
சிலந்தி வலை > சிலந்தியால் பின்னப்பட்ட வலை
செப்புச்சிலை > செப்பினால் ஆகிய சிலை
செங்கல் சுவர் > செங்கல்லால் ஆகிய சுவர்
தங்கப் பதுமை > தங்கத்தினால் ஆன பதுமை
தற்கொலை > தன்னால் நிகழ்த்தப்பட்ட கொலை
தார்ச்சாலை > தாரினால் ஆகிய சாலை
தீ விபத்து > தீயினால் ஆன விபத்து
துப்பாக்கிச் சண்டை > துப்பாக்கியால் விளைந்த சண்டை
துப்பாக்கிச் சூடு > துப்பாக்கியால் ஏற்பட்ட சூடு
தேர்த்தானை > தேரால் ஆகிய தானை
தொழிலாளர் பேரணி >தொழிலாளரால் நடந்த பேரணி
நாநலம் > நாவினால் விளையும் நலம் (பேச்சு நலம்)
நிதயுதவி > நிதியால் செய்த உதவி