நிழற்படம் | > | நிழலால் விளைந்த படம் |
நீர்வேலி | > | நீரால் சூழப்பட்ட வேலி |
நெல்வேலி | > |
நெல்லால் சூழப்பட்ட வேலி
(நெல் - நெல் விளையும் நிலம் - ஆகுபெயர்) |
பட்டுப்புடவை | > | பட்டினால் ஆகிய புடைவை |
பட்டு நூல் | > | பட்டினால் ஆகிய நூல் |
பசுமட்கலம் | > | பசுமண்ணால் ஆகிய கலம் |
பதிவு மூப்பு | > | பதிவினால் உண்டான மூப்பு |
பணக்கஷ்டம் | > |
பணத்தினால் (பணம் இல்லாமையால்)
உண்டான கஷ்டம் |
பணி மூட்பு | > | பணியினால் உண்டான மூட்பு |
பருத்தி நூல் | > | பருத்தியால் ஆன நூல் |
பளிங்கு மாளிகை | > | பளிங்கினால் ஆகிய மாளிகை |
பனிமலை | > | பனியால் ஆகிய மலை |
பாமாலை | > | பாவினால் ஆகிய மாலை |
பாற்கடல் | > |
பாலினால் ஆகிய கடல் (பாலினை உடைய
கடல் என்று இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகையாகவும் கொள்ளலாம்) |
பிணக்குவியல் | > | பிணத்தினால் ஆன குவியல் |
பூப்பந்து | > |
பூவினால் ஆகிய பந்து (பூக்கடை களில்
பூச்சரத்தைச் சுற்றிப் பந்து போல வைத்திருப்பார்கள்) |
பூமாலை | > | பூவினால் ஆகிய மாலை |
பொற்சித்திரம் | > | பொன்னால் ஆகிய சித்திரம் |
மகளிர்பேரணி | > | மகளிரால் நடத்தப்படும் பேரணி |
மசால் வடை | > | மசாலாவால் செய்த வடை |