மஞ்சுசூழ்மலை | > | மஞ்சினால் (மேகம்) சூழ்மலை |
மரக்கால் ஆட்டம் | > | மரக்காலால் ஆடும் ஆட்டம் |
மரப்புணை | > | மரத்தால் ஆகிய புணை (தெப்பம்) |
மலர்வாளி | > | மலரால் ஆகிய வாளி (அம்பு) |
மாட்டுவண்டி | > | மாட்டினால் இயங்கும் வண்டி |
மாணவர் பேரணி | > | மாணவரால் நடத்தப்படும் பேரணி |
மின்னிணைப்பு | > |
மின்னால் (மின்சாரத்தால்)
உண்டாக்கப்படும் இணைப்பு |
முத்தாரம் | > | முத்தினால்ஆகிய ஆரம் (மாலை) |
முல்லைச்சரம் | > | முல்லையால் ஆன சரம் (மாலை) |
முள்வேலி | > | முள்ளால் ஆகிய வேலி |
மூடப்பழக்கம் | > | மூடத்தனத்தால் ஏற்பட்ட பழக்கம் |
யானைப்படை | > |
யானையால் ஆகிய படை (யானை யினது
படை என்றும் கொள்ளலாம்) |
ரதப்பயணம் | > | ரதத்தால் ஆகும் பயணம் |
வாய்ச்சண்டை | > | வாயால் (வாய்ச்சொல்லால்) விளைந்த சண்டை |
விசைத்தறி | > | விசையால் இயங்கும் தறி |
வினாவங்கி | > | வினாவால் உண்டான வங்கி |
வெங்காய தோசை | > | வெங்காயத்தால் ஆகிய தோசை |
வெள்ளிக்கவசம் | > | வெள்ளியால் ஆன கவசம் |
வெள்ளிக்குடம் | > | வெள்ளியால் ஆன குடம் |
வெற்றிக்களிப்பு | > | வெற்றியால் வந்த களிப்பு |