பக்கம் எண் :

தொகைகள்19கி. செம்பியன்

4. நான்காம் வேற்றுமைத் தொகை

     நான்காம் வேற்றுமை உருபு 'கு' என்பதாகும். இவ்வேற்றுமை எப்பொருளையும்
கொள்ளும் என்பது தொல்காப்பியர் கருத்து. எனினும் பத்துப் பொருள்களிலும்
அவற்றைப் போன்ற பிறவற்றிலும் வரும் எனப் பொருத்தமான பிற எல்லாப்
பொள்களுக்கும் வழி வகுத்துள்ளார் தொல்காப்பியர். நான்காம் வேற்றுமைக்குக்
கோடற் பொருளே முதன்மையானது. தொல்காப்பியர் எடுத்துரைக்கும் பத்துப்
பொருள்கள் வருமாறு;

அதற்கு வினையுடைமை - கரும்பிற்கு வேலி
அதற்கு உடம்படுதல் - சாத்தற்கு மகள் உடம்பட்டார்
அதற்குப்படுபொருள் - சாத்தற்குக் கூறு கொற்றன்
அதுவாகு கிளவி (பொருள்) - கடிசூத்திரத்திற்குப் பொன்
அதற்கு யாப்புடைமை - கைக்கு யாப்புடையது கடகம்
அதற்பொருட்டதால் - கூழிற்குக் குற்றேவல் செய்யும்
நட்பு - பாரிக்கு நண்பர் கபிலர்
பகை - பாம்புக்குப் பகை கருடன்
காதல் - தமிழுக்குக் காதலர் பாவேந்தர்
சிறப்பு - எழுத்தாளர்க்குச் சிறந்தது எழுதுகோல்

நன்னூலார் கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை முதலான
ஏழு பொருள்களைக் குறிப்பிட்டுள்ளார்.

கோடற்பொருள் - இரவலர்க்குப் பொன்னைக்கொடுத்தான்
பகை தொடர் பொருள் - பாம்புக்குப் பகை கருடன்
நட்புத்தொடர் பொருள் - கோப்பெருஞ்சோழனுக்கு நண்பர் பிசிராந்தையார்
தகுதியுடைப்பொருள் - அரசர்க்கு உரித்து அருங்கலம்