முதற்காரண
காரியப் - குண்டலத்திற்குப் பொன்பொருள் (அதுவாதல்)
நிமித்தகாரண காரியப் - கூலிக்கு வேலை செய்தாள்
பொருள் (பொருட்டு)
முறைக்கு இயைபொருள் - சாத்தனுக்கு மகன் கொற்றன்
நான்காம் வேற்றுமைக்கு 'கு' வ்வுருபைத் தவிரப் 'பொருட்டு' நிமித்தம் ஆகியனவும்,
குவ்வுருபின்மேல் 'ஆக' என்பதும் சொல்லுருபுகளாக வரும்.
திருவிழாவின் பொருட்டு விடுமுறை விடப்பட்டது
திருவிழாவின் நிமித்தம் விடுமுறை விடப்பட்டது
திருவிழாவிற்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவ்வாறான விளக்கங்களுடன் நான்காம் வேற்றுமைத் தொகையை நோக்குவோம்:
நான்காம் வேற்றுமைத் தொகை;
என் மகன் > எனக்கு மகன்
இங்கே ஒரு விளக்கம்
எனது கை எனது புத்தகம் என்று எழுதலாம்; ஆனால் எனது மகன் என்று
எழுதக்கூடாது; மகன் உயர்திணை; கை, புத்தகம் ஆகியன அஃறிணை; 'அது' என்பது
அஃறிணைக்கே வரும். தமிழில் இரண்டு 'அது' உண்டு. ஒன்று: சுட்டு அது:
மற்றொன்று ஆறாம் வேற்றுமை உருபு அது. எனது மகன் என்பதில் இருக்கும் அது
ஆறாம் வேற்றுமை உருபாக இருப்பினும் உறவைக் குறிக்கும் பொருளுக்கு நான்காம்
வேற்றுமையே சிறந்தது என்பதனால் எனக்கு மகன் என விரித்துரைப்பதே நன்று.
அக்கினிபுத்திரன் |
> |
அக்கினிக்குப் புத்திரன் |
எமதூதன் |
> |
எமனுக்குத் தூதன் |
என் தந்தை |
> |
எனக்குத் தந்தை |
என் தாய் |
> |
எனக்குத் தாய் |
|
|
|
|