பக்கம் எண் :

தொகைகள்21கி. செம்பியன்

கண்ணதாசன் > கண்ணணுக்குத் தாசன்
கம்பதாசன் > கம்பனுக்குத் தாசன்
கம்பனடிப்பொடி > கம்பனுக்கு அடிப்பொடி
காளிதாசன் > காளிக்குத் தாசன்
தருமபுத்திரன் > தருமனுக்குப் புத்திரன்
தீவினையச்சம் > தீவினைக்கு அச்சம்
பழியஞ்சி > பழிக்கு அஞ்சி
பாரதிதாசன் > பாரதிக்குத் தாசன்
பெரியார்தாசன் > பெரியாருக்குத் தாசன்
பெரியார் பெருந்தொண்டர்கள் > பெரியாருக்குப் பெருந்தொண்டர்கள்

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

அடகுக் கடை > அடகிற்கு உரிய கடை
அமைதிப் பேச்சு > அமைதிக்கு உரிய பேச்சு
அரசுக் கல்லூரி > அரசுக்கு உரிய கல்லூரி

ஒரு விளக்கம்:
அரசு எனும் சொல் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
உயிர்தொடர்க் குற்றுயலுகரத்தில் வல்லெழுது மிகக்கூடாது:
அது ஆறாம் வேற்றுமைத் தொகையாக இருந்தால். இங்கே
நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கருதப்பட்டுள்ளது.
நான்காம் வேற்றுமை எப்பொருளையும் ஏற்கும் தன்மை
கொண்டது. மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தின்பின்
வல்லெழுத்து மிகக்கூடாது என்பது தமிழ்மொழியின்கண்
பொது விதியும் அன்று. மரபுத் தொடர்,உருபுப் பொருள்
பரிசுச்சீட்டு, அடகுக்கடை, விறகுக்கடை.

அரசுப் பணியாளர்கள் > அரசுக்கு உரிய பணியாளர்கள்
அரசுப் பேருந்து > அரசுக்கு உரிய பேருந்து
இலக்கியக் கழகம் > இலக்கியத்திற்கு உரிய கழகம்