பக்கம் எண் :

தொகைகள்22கி. செம்பியன்

இலக்கியப் பணி > இலக்கியத்திற்கு உரிய பணி
உரக் கடை > உரத்திற்கு உரிய கடை (உரத்தை உடைய
கடை என இரண்டாம் வே.உப.உதொ.தொகை
யாகவும் கருதலாம்)
உருபுப் பொருள் > உருபிற்கு உரிய பொருள்
உலகக் கோப்பை > உலகிற்கு உரிய கோப்பை
உள்ளாட்சித் தேர்தல் > உள்ளாட்சிக்கு உரிய தேர்தல்
ஊராட்சித் தேர்தல் > ஊராட்சிக்கு உரிய தேர்தல்
கடன்பத்திரம் > கடனுக்கு உரிய பத்திரம்
கருத்தரங்கம் > கருத்துக்கு உரிய அரங்கம்
கலைமகள் > கலைக்கு உரிய மகள்
காவல்படை > காவலுக்கு உரிய படை
காவல்துறை > காவலுக்கு உரிய துறை
காளிகோவில் > காளிக்கு உரிய கோவில்
குடிநீர் > குடிக்கு (குடிப்பதற்கு) உரிய நீர்
குடியரசுத் தலைவர் > குடியரசுக்கு உரிய தலைவர்
குண்டர் சட்டம் > குண்டர்களுக்கு உரிய சட்டம் (குண்டர்களால்
உருவாக்கப்பட்ட சட்டம் என்றும் கொள்ளலாம்)
குரவர் பணி > குரவருக்கு (பெரியோர்)உரிய பணி
குழந்தைப்பால் > குழந்தைக்குத் தரும் பால்
கொடிக்கம்பம் > கொடிக்கு உரிய கம்பம்
கொடிமேடை > கொடிக்கு உரிய மேடை
கோழித்தீவனம் > கோழிக்கு உரிய தீவனம்
சட்டப் பல்கலைக்கழகம் > சட்டத்திற்கு உரிய பல்கலைக்கழகம் (சட்டத்தைக்
கற்பிக்கும் பல்கலைக் கழகம் என இரண்டாம்
வே. உ. ப. உ. தொகையாகவும் கொள்ளலாம்)
சத்துணவுப் பணியாளர்கள் >சத்துணவிற்கு உரிய பணியாளர்கள்