பக்கம் எண் :

தொகைகள்2கி. செம்பியன்

தெரியாமல் மறைந்து கிடக்கும் இலக்கணம்; இரண்டு - கண்ணுக்கும் தெரியும்
இலக்கணம்.
1. கடையின்கண் பொருத்தப்படும் ஆணி.
     அல்லது
     கடைக்கண் பொருத்தப்படும் ஆணி.

இஃது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

2. கடை
     என்னும் சொல்லில் இறுதியாக 'ஐ' என்னும் உயிர்
     எழுத்து நிற்கிறது.

ஆணி என்னும் சொல்லில் முதலில் 'ஆ' என்னும் உயிர் எழுத்து நிற்கிறது.

கட் + ணி இரண்டும் உயிர் எழுத்துக்கள்
ஒரு சந்திப்பில் உயிர் எழுத்துக்கள் வந்தால் ஒன்றுசேர மாட்டா. அதனால் அங்கே
யகரம் வந்து ஒன்றுசேர்த்து வைத்திருக்கிறது. இதனை 'ய'கர உடம்படுமெய் என
இலக்கணப் புலவர் கூறுவர்.

ஒரு செய்தி
     இவற்றைப் படித்துவிட்டுச் சிற்றூர்க்காரன் 'கடையாணி' எனப் பேசவில்லை;
இலக்கணங்களைப் படிக்காமலேயே பேசுகிறான்! இது மாதிரியான பல நுட்பங்களை
அறிந்துகொள்வதே இலக்கணம். எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் : 355). கடை என்பதற்கு இப்போது shop
எனும் பொருளும் ஏற்பட்டுள்ளது. அதனால் கடையின்கண் விற்கப்படும் ஆணி
எனவும் விரிக்கலாம்!
சொல்லொடு சொல் சேர்வது தொடர். அஃது இருவகைப்படும்;
1. தொகைநிலைத் தொடர் 2. தொகாநிலைத் தொடர்.
இவற்றுள் இந்நூல் தொகைநிலைத் தொடர்களைப்பற்றி மட்டுமே விவரிக்கும்.