இரண்டு
காரணங்களினால் தொகை என்கிறோம். 1. வேற்றுமை உருபும்
(வேற்றுமைத் தொகையில்), உவம உருபும் (உவமைத் தொகையில்), வினைச்சொல்
ஈறும் (வினைத்தொகையில்), பண்புச் சொல் ஈறும் (பண்புத்தொகையில்) தொகுதலின்
தொகை. 2. அவ்வப் பொருள்களின்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள்
பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை.
தொகை ஆறு வகைப்படும்; அவையாவன: வேற்றுமைத் தொகை;
வினைத்தொகை, பண்புத்தொகை; உவமைத்தொகை; உம்மைத்தொகை;
அன்மொழித்தொகை.
வேற்றுமைத்தொகை
வேற்றுமை எட்டு வகைப்படும்; வேற்றுமைத் தொகை ஆறு
வகைப்படும். முதல்
வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப் பெயர்பெறும்; எட்டாம் வேற்றுமை
விளிவேற்றுமை எனப் பெயர்பெறும். இவை இரண்டில் மறைந்து வரும் உருபுகள்
இல்லை.
முருகன் வந்தான் |
> |
எழுவாய் வேற்றுமை |
முருகா வா |
> |
விளி வேற்றுமை |
வேற்றுமை என்றால் பொருளை (meaning) வேறுபடுத்துவது
என்று பொருள்.
தமிழில் எட்டு வகையாகப் பொருளை வேறுபடுத்தலாம்.
செல்வன் |
பந்தாடினான் |
செல்வனைப் |
பந்தாடினான் |
செல்வனொடு |
பந்தாடினான் |
செல்வனுக்குப் |
பட்டம் அளித்தனர் |
செல்வனின் |
மேலானவன் |
செல்வனது |
எழுதுகோல் |
செல்வனிடம் |
செல்வம் உண்டு |
செல்வா |
வா |
இங்கே, ஐ, ஆல், (ஒடு), கு, இன், அது, இடம் முதலான
உருபுகள்
இணைக்கப்படுவதால் பொருள் வேறுபட்டு நிற்பதை |
|
|
|