உணரலாம், பொருளை வேறுபடுத்துவதால்
இந்த உருபுகளுக்கு வேற்றுமை உருபுகள்
எனப் பெயர் சூட்டினர்.
வேறொரு வகையாக இவ்வேற்றுமைகளை அறிவோம்;
அண்ணா ஒருமுறை அமெரிக்கா சென்றார்; யேல் பல்கலைக்
கழகத்தில் உரை நிகழ்த்தினார்; அவர் தமது பேச்சாற்றலால்
அனைவரையும் கவர்ந்தார். அவரைப் பலரும் பாராட்டினர்.
அவரால் தமிழ்நாடு பெருமையுற்றது. அவருக்குப் பாராட்டுக்கள்
குவிந்தன. பேச்சுத் திறனில் அவரின் மிக்கார் யாரும் இலர்.
அவரது பேச்சு நூலாக வெளிவந்தது. அவரிடம் தமிழ்நாடு உயிரையே
வைத்திருந்தது.
(பேரா. ஜெ. ஸ்ரீசந்திரன், தமிழில் க்,ச்,த்,ப்
பிழையின்றி எழுதுவது எப்படி, ப.69)
தமிழண்ணல் அவர்கள் 'இனிய தமிழ்மொழியின் இயல்புகள்'
(முதற் பருவம்)
எனும் நூலின்கண், நம் நாட்டில் பத்திரம் எழுதும் முறையைக்கொண்டு வேற்றுமையை
விளக்கும் பாங்கு சுவையானது:
"இன்னார் மகனாகிய யான், இன்னார்க்கு மகனாகிய இவர்க்கு,
ஆலமலரத்தின் வடக்கு அனுமார் கோயிலின் தெற்கு வளைவுச்
சாலையின் கிழக்கு, தேநீர்க் கடையின் மேற்கு ஆகிய நான்கு
எல்லைக்கு உட்பட்ட, இந்த மாவட்டம் இந்த ஊரில் பாண்டிய
நகரின்கண் உள்ள எனது வீட்டை என் கையெழுத்திட்ட இப்பத்திரத் தினால் கிரையம் செய்து தருகிறேன்".
யான்- எழுவாய் |
|
- முதல்/ வேற்றுமை |
வீட்டை |
|
- இரண்டாம் வேற்றுமை |
இப்பத்திரத்தினால் |
|
- மூன்றாம் வேற்றுமை |
இன்னார்க்கு, இவர்க்கு |
|
- நான்காம் வேற்றுமை |
கோயிலின் தெற்கு
சாலையின் கிழக்கு |
 |
- ஐந்தாம் வேற்றுமை |
எனது |
|
_ ஆறாம் வேற்றுமை |
பாண்டிய நகரின்கண் |
|
- ஏழாம் வேற்றுமை |
|
|
|
|