பக்கம் எண் :

தொகைகள்24கி. செம்பியன்

பட்டப் படிப்பு> பட்டத்திற்கு உரிய படிப்பு
பத்தினிக் கோட்டம்> பத்தினிக்கு உரிய கோட்டம்
பயணக் கப்பல்> பயணத்திற்கு உரிய கப்பல்
பயிர்க்கடன்> பயிருக்கு உரிய கடன்
பரிசுச்சீட்டு> பரிசுக்கு உரிய சீட்டு
பாத்திரக்கடை> பாத்திரத்திற்கு உரிய கடை
பொருட்பெண்டிர்> பொருளுக்கு உரிய பெண்டிர்
போர்க்குணம்> போருக்கு உரிய குணம்
போர்விமானம்> போருக்கு உரிய விமானம்
மணமகள்> மணத்திற்கு உரிய மகள்
மணமகன்> மணத்திற்கு உரிய மகன்
மணமேடை> மணத்திற்கு உரிய மேடை
மலர்க் கண்காட்சி> மலருக்கு உரிய கண்காட்சி
மாட்டுத் தீவனம்> மாட்டுக்கு உரிய தீவனம்
மானியக் கோரிக்கை> மானியத்திற்கு உரிய கோரிக்கை
மிட்டாய்க்கடை> மிட்டய்க்கு உரிய கடை
மின்கம்பி> மின்னுக்கு (மின்சாரத்திற்கு) உரிய கம்பி
முருகன் கோயில்> முருகனுக்கு உரிய கோயில்
வரிச்சலுகை> வரிக்கு உரிய சலுகை
வள்ளுவர் கோட்டம்> வள்ளுவர்க்கு உரிய கோட்டம்
விடுதலைப் புலிகள்> விடுதலைக்குப் போராடும் புலிகள்
(புலிகளைப்போலச் செயல்படுபவர் களைப்
புலிகள் என்றதனால் புலிகள் என்பது
உவமையாகு பெயர்)
விலைமகள் > விலைக்கு உரிய மகள்
விளையாட்டுப் பயிற்சி> விளையாட்டிற்கு உரிய பயிற்சி
விளையாட்டு விழா> விளையாட்டிற்கு உரிய விழா
வெளியீட்டுக் குழுவினர்> வெளியீட்டிற்கு உரிய குழுவினர்
வைப்புநிதி> வைப்புக்கு (வைப்பதற்கு) உரிய நிதி