5. ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஐந்தாம் வேற்றமையின் உருபு 'இன்' என்பதாகும்.'இப்பொருளின்
இத்தன்மைத்து இப்பொருள்' என்பதனை விளக்குவதற்கு இவ்வேற்றுமை பயன்படும்.
இதன் விரிவாக நான்கு பொருள்களைத் தொகுத்துச் சுட்டுவர் சேனாவரையர். அவை
பொருவு, எல்லை, நீக்கம், ஏது என்பனவாகும்.
இவற்றுள் பொருவு இருவகைப்படும்.
உறழ் பொருவு
உவமப் பொருவு
ஏதுவும் இருவகைப்படும் :
ஞாபக ஏது
காரக ஏது
இந்நான்கு பொருள்களின் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் விரிவாகச் சுட்டியுள்ளார்:
வண்ணம் |
- காக்கையின் கரிது களம்பழம் |
 |
பொருவுப்பொருள் |
வடிவு |
- இதனின் வட்டம் இது |
அளவு |
- இதனின் நெடிது இது |
சுவை |
- இதனின் இனிமை இது |
தண்மை |
- இதனின் தண்ணிது இது |
வெம்மை |
- இதனின் வெய்து இது |
நன்மை |
- இதனின் நன்மை இது |
தீமை |
- இதனின் தீமை இது |
சிறுமை |
- இதனின் சிறிது இது |
பெருமை |
- இதனின் பெரிது இது |
வன்மை |
- இதனின் வலிது இது |
மென்மை |
- இதனின் மெலிது இது |
கடுமை |
- இதனின் கடிது இது |
முதுமை |
- இதனின் முதுமை இது |
|
|
|
|