பக்கம் எண் :

தொகைகள்26கி. செம்பியன்

இளமை - இதனின் இளமை இது பொருவுப்பொருள்
சிறத்தல் - இதனின் சிறந்தது இது
இழித்தல் - இதனின் இழிந்தது இது
புதுமை - இதனின் புதிது இது
பழைமை - இதனின் பழைது இது
இன்மை - இவனின் இலன் இவன்
உடைமை - இவனின் உடையன் இவன்
நாற்றம் - இதனின் நாறும் இது
பன்மை - இதனின் பல இவை
சின்மை - இதனின் சில இவை


அச்சம்
ஆக்கம்
- கள்ளரின் அஞ்சும்
- வாணிகத்தின் ஆயிளான்
>
>
ஞாபக ஏது
காரக ஏது
தீர்தல்
பற்றுவிடுதல்
- ஊரின் தீர்ந்தான்
- காமத்தின் பற்றுவிட்டான்
நீக்கப் பொருள்
கருவூரின் கிழக்கு
இதனின் ஊங்கு
எல்லைப் பொருள்

இவை தவிர உரையாசிரியர் சேனாவரையர்,
அவனின் இனியவன் இவன்
அதனின் சேய்த்து இது
இகழ்ச்சியின் கெட்டான்
மகிழ்ச்சியின் மைந்துற்றான்
எனும் பொருள் விரிவுகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

     நன்னூலார் 'இன்' உருபுடன் 'இல்' உருபையும் சேர்த்து இரண்டு உருபுகளைக்
குறிப்பிட்டுள்ளார். நீங்கல், ஒப்பு, எல்லை. ஏது ஆகிய நான்கு பொருள்களைச்
சுட்டிக்காட்டினார்:
நீக்கப்பொருள் > மலையின் வீழ் அருவி
ஒப்புப்பொருள் > காக்கையின் கரிது களம்பழம்