பக்கம் எண் :

தொகைகள்27கி. செம்பியன்

எல்லைப்பொருள் > மதுரையின் வடக்குச் சிதம்பரம்
ஏதுப்பொருள்    > கல்வியில் பெரியன் கம்பன்
ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய சொல் உருபுகள்; நீக்கப் பொருளிலும், எல்லைப்
பொருளிலும் 'இல்', 'இன்' உருபுகளின்மேல், நின்று, இருந்து என்பவை உம் பெற்றும்
பெறாதும் சொல்லுருபுகளாக வரும்.
1.

ஊரினின்றும் போயினாள்
ஊரினின்று போயினான்
நீக்கப்பொருள்
ஊரிலிருந்தும் போயினாள்
ஊரிலிருந்து போயினாள்
2. காட்டினின்றும் ஊர் காவதம்
காட்டின் ஊர் காவதம்
எல்லைப் பொருள்
நாட்டிலிருந்தும் ஊர் காவதம்
நாட்டிலிருந்து ஊர் காவதம்

மேற்சுட்டிய விளக்கங்களுடன் தொகைக்குள் செல்வோம்.

ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஊர் நீங்கினாள் > ஊரின் நீங்கினாள்
வரைபாய்தல்   > வரையினின்றும் பாய்தல்
கருவூர்க்கிழக்கு > கருவூரின் கிழக்கு
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

கள்ளிப்பால் > கள்ளியிலிருந்து வடியும் பால்
குழலோசை > குழலின்றும் வெளியாகும் ஓசை
பூமணம் > பூவினின்றும் பரவும் மணம்
மணியோசை > மணியினின்றும் எழும்பும் ஓசை
மலையருவி > மலையினின்று வீழும் அருவி
(திரு) முலைப்பால் > முலையினின்று வரும் பால்
மதுரைத் தென்றல் > மதுரையினின்று வரும் தென்றல்