பக்கம் எண் :

தொகைகள்29கி. செம்பியன்

6.ஆறாம் வேற்றுமைத் தொகை

      ஆறாம் வேற்றுமையின் உருபு 'அது' என்பதாகும், இதற்குக் கிழமைப்
பொருள் உரிமையாகும்; 'இதனது இது' எனும் நிலையைக் காட்டுதற்கு இது
பயன்படும். இக்கிழமைப் பொருள் தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப்படும்.

தற்கிழமை ஐந்து வகையாகும்

1, ஒன்று பல குழீஇய தற்கிழமை > எள்ளது குப்பை (கூட்டம்)
2, வேறு பல குழீஇய தற்கிழமை > படையது குழாம்
3, ஒன்றியல் கிழமை > சாத்தனது இயற்கை
> நிலத்தது அகலம்
இயற்கைக் கிழமை
> சாத்தனது நிலைமை
சாத்தனது இல்லாமை
நிலைக் கிழமை
4, உறுப்பின் கிழமை > யானையது கோடு (தந்தம்)
புலியது உகிர் (நகம்)
5, மெய் திரிந்தாய தற்கிழமை > சாத்தனது
செயற்கை
சாத்தனது
கற்றறிவு
செயற்கைக் கிழமை
> அரசனது
முதுமை
அரசனது
முதிர்வு
முதுமைக் கிழமை
> சாத்தனது
தொழில்
சாத்தனது
செலவு
வினைக் கிழமை