8.2. ஒரே தொடரில் வேறுவேறு
உருபுகளும் அடுக்கப்படலாம். தினையில் கிளியைக்
கடியும்
- வேற்றுமைத் தொடரின் இறுதியிலும் இடையிலும் ஆறு உருபுகளும்
நின்று பொருள் கொடுக்கும்.
கடந்தான் நிலத்தை |
> நிலத்தைக் கடந்தான் |
வந்தான் சாத்தனோடு |
> சாத்தனோடு வந்தான் |
கொடுத்தான் சாத்தற்கு |
> சாத்தற்குக் கொடுத்தான் |
வலியன் சாத்தனின் |
> சாத்தனின் வலியன் |
ஆடை சாத்தனது |
> சாத்தனது ஆடை |
இருந்தான் குன்றத்துக்கண் |
> குன்றத்துக்கண் இருந்தான் |
- ஓர் உருபு பிறிதோர் உருபை ஏற்கும்.
சாத்தனதனை = சாத்தன் + அது + அன் + ஐ (அன் சாரியை)
சாத்தனதனொடு
சாத்தனதற்கு
சாத்தனதனின்
சாத்தனதன்கண்
* உரையாசிரியர் இதற்கு எடுத்துக்காட்டுத் தந்திருந்தாலும் ஓர் உருபு
மற்றோர் உருபினை ஏற்றல் பெரும்பாலும் இல்லை.
- வேற்றுமை உருபுகளுக்கு உள்ள பொருள்களை எதிர்மறுத்து
மொழிந்தாலும் தத்தம் பொருள்களை இழக்கா.
மரத்தைக் குறையான்
வேலால் எறியான்
- ஒரே தொடரில் இரண்டு உருபுகள் தொக்கி வரலாம்.
யானைக்கோட்டு நுனி குறைத்தான்
யானையது கோட்டினை நுனிக்கண் குறைத்தான்
6, 2, 7 ஆகிய வேற்றுமை உருபுகள் மறைந்தன.
|
|
|
|