பக்கம் எண் :

தொகைகள்43கி. செம்பியன்

     உ. சிறுபான்மை எழுவாய் வேற்றுமை சுட்டுப்பெயரையும், வினாப்பெயரையும்,
        வினா வினைக்குறிப்புச் சொல்லையும் கொண்டு முடியும்.
சாத்தன் அவன் (சுட்டு)
சாத்தன் யாவன் (வினா)
சாத்தன் யார் (வினைக்குறிப்பு)
  1. முதற்பொருள் சினைப்பொருள் என இருபொருள்கள் உண்டு.
    உடல் முதல் என்றால் தலை சினை; தலை முதல் என்றால் கண்
    சினை; கை முதல் என்றால் விரல் சினை; விரல் முதல் என்றால்
    நகம் சினை. சினைப்பொருளுக்கு 'ஐ' உருபோ கண் உருபோ
    வரலாம்;

  2. கோட்டைக் குறைத்தான் கோடு - தந்தம்
    கோட்டின்கண் குறைத்தான்

  3. முதற்சொல்லோடு தொடர்ந்து சினைச்சொல்லும் ஒரே தொடரில் வந்தால்,
    முதலுக்கு 'அது' கொடுத்தால் சினைக்கு 'ஐ' கொடுக்க வேண்டும்.
    யானையது கோட்டைக் குறைத்தான் முதலுக்கு 'ஐ' கொடுத்தால் சினைக்குக் 'கண்'
    கொடுக்க வேண்டும்.

  4. யானையைக் கோட்டின்கண் குறைத்தான்.
  5. 8.1. உருபுகள் தொடர்ந்து அடுக்கப்படலாமா' அடுக்கபடலாம்.

    1, என்னொடு நின்னொடுஞ் சூழாது           (அகம்-128)

    2. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
       நின்றது மன்னவன் கோல்                   (குறள்-543)

    இவற்றின்கண் முடிக்கும் சொல் ஒன்றாக இருப்பதை அறிய வேண்டும்.
    முதல் எடுத்துக்காட்டில் 'சூழாது' என்பது என்னொடு சூழாது, நின்னொடும்
    சூழாது என இரண்டிற்கும் பொது. இரண்டாவது எடுத்துக்காட்டில்
    'ஆதியாய் நின்றது' என்பது நூற்கும் அறத்திற்கு ஆதியாய் நின்றது என
    ஆதியாய் நின்றது இரண்டிற்கும் பொது.