உருபு மயக்கம்
கிழங்கு மணற்கு ஈன்ற முளை
எனும் தொடரில் மணலின்கண் என்று கண் உருபு வர
வேண்டிய இடத்தில் குவ்வுருபு வந்தது.
இவற்றின் விரிவினைத் தொல்காப்பியச் சொல்லதிகார வேற்றுமை மயங்கியலில் பயிலலாம்.
- செய்யுளின்கண் வேற்றுமை உருபுகள் திரிந்துவருதல் உண்டு. காவலோனைக்
களிறஞ்சும்மே என்பது காவலோனக் களறிஞ்சும்மே என 'ஐ' உருபு 'அ' வாகத்
திரிந்து வந்தது.
- அ. ஐந்தாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் பெயர்ச் சொற்களைக்
கொண்டு முடியும்:
மலையின் வீழ் அருவி
முருகனது வேல் |
|  |
அருவி, வேல் ஆகியன பெயர்ச் சொற்கள் |
ஆ. மற்ற எல்லா வேற்றுமைகளும் வினைச்சொற்களைக் கொண்டு முடியும்:
அழகன் படித்தான் (எழுவாய்)
ஆற்றைக் கடந்தான் (இரண்டு)
கல்லால் அடித்தான் (மூன்று)
முல்லைக்குத் (தேர்) கொடுத்தான்(நான்கு)
அவையின்கண் இருந்தான் (ஏழு)
இ. இவற்றுள் நான்கும் ஏழும் பெயர்ச்சொற்களைக் கொண்டும் முடியும்.
எனக்கு மகன் (நான்கு)
கையின்கண் விரல் (ஏழு)
ஈ சிறுபான்மையாகத் தொழிற்பெயரையும் விணையாலணையும் பெயரையும் கொண்டு முடியும்.
குடத்தை வனைதல் ( தொழிற்பெயர்)
குடத்தை வனைந்தவன் (வினையாலணையும் பெயர்)
|
|
|
|