மிகுத்து எழுதினால் தேரை இழுக்கும்
திருவிழா என இரண்டாவதாக விரியும்.
தேர்ச்சக்கரம் என்பது தேரினது சக்கரம் என ஆறாவதாக
விரியும்.
தேர்ப்படை என்பதனைத் தேரினது படை என ஒன்றன் கூட்டத் தற்கிழமையாகக்
கருதாமல், தேரால் (தேர்களால்) ஆகிய படை என்று மூன்றாவதாகக் கருதுவதே
பொருந்தும். குதிரையால் ஆகிய படை குதிரைப்படை; கப்பலால் ஆகிய படை
கப்பல்படை: பூவால் ஆகிய மாலை பூமாலை என்பதைப் போல!
நாநலம் எனும் தொடரை நாவினது நலம் என்று ஆறாவதாகவே
கருதுவோம்.
இங்கே நலம் என்பது உடல்நலம் போல நாவினது நலத்தையும், இனிய திறமையான
பேச்சையும் குறிக்கும்.
பூப்பந்து > இத்தொடர் விளையாடுவதற்கு உரிய பூப்பந்தினைக்
குறிக்கும்போது பூப்போன்ற பந்து என உவமைத் தொகையாக விரிவடையும்;
பூக்கடைகளிலே பந்தாகச் சுற்றிவைத்த பந்தைக் குறிப்பிடும்போது பூவால் ஆகிய
பந்து என மூன்றாவதாக விரிவடையும். சொல்லுவோனின் இடத்திற்கும் காலத்திற்கும்
சூழ்நிலைக்கும் ஏற்பப் பொருள் விரித்து உணரவேண்டும்.
நுழைவுத்தேர்வு > இத்தொடர் பொறியியல் மருத்துவம்
போன்ற கல்விகளில்
நுழைவதற்கான தேர்வு எனும் பொருளையும், வளையத் திற்குள் நுழைந்து
வரவேண்டிய தேர்வு எனும் பொருளையும் கொடுக்கும்; எப்பொருளாயினும்
நுழைவிற்கு உரிய தேர்வு என நான்காவதாகவே விரியும்.
முள் வேலி என்றால் முள்ளால் ஆகிய வேலி என மூன்றாவதாக
விரிக்கவேண்டும். முள்வாங்கி என்றால் முள்ளை இழுக்கும் வாங்கி என
இரண்டாவதாக விரியும்; ஒலிவாங்கி > ஒலியை வாங்கி; இடிதாங்கி >
இடியைத் தாங்கி; குடிதாங்கி > குடியைத் தாங்கி!
கால்பந்து > காலால் உதைக்கப்படும் பந்து
கைப்பந்து > கையால் தட்டும் பந்து
இறகுப் பந்து > இறகால் ஆன பந்து
குவளைப்பந்து > குவளை போன்ற பந்து (உவமைத் தொகை)
கூடைப் பந்து > கூடையின்கண் இடப்படும் பந்து
|
|
|
|