பக்கம் எண் :

தொகைகள்47கி. செம்பியன்

     வண்டின்கால்; இப்படிக்கு இருந்தால் இது தொகை; வண்டினது கால் என்பது
விரி. 'இன்' என்பதனை இங்கே உருபாகக் கருதக் கூடாதா' கூடாது; இங்கே 'இன்'
சாரியை; 'இன்' என்று ஓர் உருபு உள்ளதே' ஆம்! அது ஐந்தாம் வேற்றுமை உருபு.
உருபிற்கும் சாரியைக்கும் எப்படி வேறுபாடு கண்டுபிடிப்பது' இப்பொழுது 5-ஆம்
வேற்றுமை எந்தப் பொருள்களுக்கு வரும், 6-ஆம் வேற்றுமை எந்தப்
பொருள்களுக்கு வரும் என்பது நம் நினைவுக்கு வரவேண்டும். உடமைப் பொருளுக்கு
'இன்' உருபு வராது. (இந்த 'இன்' ஐ உருபாகக் கருதவேண்டும் என்று இலக்கணப்
புலவர்களுள் ஒரு கட்சி உண்டு) உடமைப் பொருளுக்கு 'இன்' உருபு வராது
என்கிறபோது வண்டுக்கால் என்று எழுதினால் குழப்பம் நிகழாது அன்றோ' ஓசை
நயம் கருதி 'இன்' சாரியைச் சேர்க்கப்படுகிறதாம். மீண்டும் அதே கேள்வி! எப்படிக்
கண்டுபிடிப்பது' சாரியையாக இருந்தால் உருபினை ஏற்கும்; உருபாக இருந்தால்
உருபினை ஏற்காது! புரியவில்லையா?
வண்டின் அது கால்
இதன்கண் 'இன்' சாரியை 'அது' எனும் உருபினை ஏற்றுக் கொண்டது.

மலையின் வீழ்அருவி, கருவூரின் கிழக்கு என்பனவற்றில் உள்ள 'இன்' உருபாகும்.
அவற்றின் முன்னர் (இடமுன்) உருபு இடம் பெறாது. அதாவது,
மலையின்இன் வீழ் அருவி
கருவூரின்இன் கிழக்கு
என வாரா.

     வண்டது கால், யானையது தலை என எழுதிவிட்டால் குழப்பம் இல்லை;
வண்டின் கால் யானையின் தலை என எழுதும்போது சாரியைப் பொருளுக்குச்
சென்றதாம்; வண்டினது கால், யானையினது தலை என்று சாரியைக் கொடுத்து,
உருபும் கொடுத்து எழுதினால் சாரியை உருபிற்குச் சென்றதாம்.
1, சாரியைப் பொருளுக்குச் சென்றது: வண்டின் கால்
2, சாரியை உருபிற்குச் சென்றது: வண்டினது கால்