ஆங்கில மொழியில் ஆறாம் வேற்றுமையில்
(Possessive Case) மட்டும் தமிழ்
மொழியைப் போலப் பின்னொட்டு வருகின்றது.
Rama's umbrella
அதிலும் உயர்திணையாக இருந்தால் மட்டும். இதே ஆறாம் வேற்றுமை
அஃறிணையாக இருந்தால்
The leg of the table
என்று 'of'' என்னும் முன்மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
எனவே, 'அது' என்னும் 6-ஆம் வே, உருபுக்கு இணையாக
(நாற்காலியினது
கால்) ஆங்கிலத்தில் 'of' உள்ளது. இந்த 'of' இடப் பொருளையும் உணர்த்தும்;
Battle of plassey பிளாசியின்கண் நடந்த போர்)
ஆங்கிலத்தில் in, on, into, upto, at என்பவைகளுக்கு
இணையாகத் தமிழில்
7-ஆம் வேற்றுமை உள்ளது.
in 1947 47 - ஆம் ஆண்டில்
on Wednesday - புதன்கிழமையில்
in the house - வீட்டில்
She went to the house-அவள் வீட்டினுள் சென்றாள் (இயக்கம்)
at night - இரவில்
up to a level - குறிப்பிட்ட எல்லை வரையில்
ஆங்கிலத்தில் for,toஆகியன தமிழின் 'கு' விற்கு இணையானவை.
அவருக்கு > to him
அவருக்கு + ஆக > for him
ஆங்கிலத்தின் from தமிழின் இருந்து (ஐந்தாம்
வேற்றுமை) என்பதற்கு
இணையானது; மூன்றாம் வேற்றுமைக்கும் வரும்.
கடையிலிருந்து > from the shop
காய்ச்சலால் துன்புறல் > suffering from fever
வேற்றுமைத் தொகை அனைத்தும் வேற்றுமைப் புணர்ச்சியாகும். இனிவரும்
வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை,
அன்மொழித்தொகை ஆகிய ஐந்தும் அல்வழிப் புணர்ச்சியாகும். |
|
|
|