11. வினைத்தொகை (அல்வழிப் புணர்ச்சி)
"வினையின் தொகுதி காலத்து இயலும்" என்பது தொல்காப்பியர்
நூற்பா.
வினைத்தொகை என்பது காலத்தின்கண் நிகழும். வினைச் சொல்லின் முதல் மட்டும்
நின்று, வினைச்சொல்லின் குணமாகிய (character) காலம் காட்டும் இடைநிலைகளும்,
(த், ட், ற், இன், ய; கு, டு, று, இரட்டிப்பு/கிறு, கின்று, ஆநின்று/ப், வ்) காலம்
காட்டும் விகுதிகளும் (று, றும், து, தும், டு, டும், கு, கும்/மின்,உம், ஈர், ஆய், க,
இய,
இயர், இ, மார், ப, உம், ஆ) மறைந்து, பெயர்ச்சொல்லைத் தழுவிக்: காலம் காட்டும்
இடைநிலைகளும் விகுதிகளும் மறைந்தாலும், முக்காலத்திற்கும் பொருத்தி வரும்.
சுடு சரம்
சுடு - வினைச்சொல்லின் வேர்; சரம் பெயர்ச்சொல். நன்னூலார் 'காலங் கரந்த
பெயரெச்சம் வினைத்தொகை' என நூற்பா செய்துள்ளார்.
சுட்ட சரம் (இறப்பு)
சுடுகின்ற சரம் (நிகழ்வு
சுடும் சரம் (எதிர்)
இப்பெயரெச்சங்களில் உள்ள காலத்தை மறைத்துவிட்டால், அவை மூன்றுக்கும்
அடிச்சொல்லான 'சுடு' என்பது மட்டும் நின்று, முக்காலங் களையும் காட்டும்.
கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.
எடுத்துக்காட்டு
அரி வாள் |
அலை கடல்
|
(ஒற்று மிகுத்து எழுதக்கூடாது; அலைக்கடல்
என மிகுத்தால், அலையை உடைய கடல்
என இரண்டாவதாகும்) |
அழி பசி |
அழு மூஞ்சி |
ஆடு அரங்கு |
ஆகு ஊழ் |
|
|
|
|