காவி விழி (சிவந்த)
கார்க்குழல் (கருமை)
பவளவாய் (சிவந்த)
பாற்கதிர் (வெண்மை)
பால்நிலா
முத்துநகை (வெண்மை)
முத்தம் முறுவல் |
 |
உரு ( நிறம்) |
கூடுதல் விளக்கம்:
| |
புலி போலப் பாய்ந்தான் எனும் தொடரைப்
புலியைப் போலப் பாய்ந்தான் என இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகையாகவும் விரிக்கலாம். |
வேல்விழி |
> | வேல் போன்ற விழி
வேலைப் போன்ற விழி |
முத்துநகை |
> | முத்துப் போன்ற நகை
முத்தினைப் போன்ற நகை |
வேற்றுமைத் தொகையாகச் சொல்ல நினைத்தால் அப்படியும் சொல்லலாம்
(இரண்டாம் வேற்றுமையைத் தவிரப் பிற வேற்றுமையாகக் கருத இடமில்லை).
'உவம உருபு வினையும் வினைக் குறிப்பும் பற்றி வரும். இரண்டாம் வேற்றுமையும்
வினையும் வினைக் குறிப்பும் பற்றி வரும் செயப்படுபொருளைத் தனக்குரியதாகக்
கொண்டு வரும். ஆதலின் அவ்வொப்புமையால் உவமைத்தொகையை இரண்டாம்
வேற்றுமை உருபில் வைத்து விரிப்பினும் அமைவுடைத்து என்பது'. (தொல்., சொல்.,
எச்சவியல். நூற்பா - 18 - சேனாவரையர் உரை விளக்கம், பதிப்பாசிரியர் பேரா. கு.
சுந்தரமூர்த்தி) |
|
|
|