பக்கம் எண் :

தொகைகள்69கி. செம்பியன்

3. அகர ஈறு > பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை; அகரமாகிய
ஈற்றையுடைய சொல் என விரியும்.
4. துடியிடை ஆடினாள் > உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை; துடிபோன்ற
இடையையுடைய பெண் ஆடினாள்.
5. தகரஞாழல் பூசினாள்
இதிலே பன்மொழித்தொகையும் உண்டு
> உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; தகரமும் ஞாழலுமாகிய
சாந்து பூசினாள்.
தகரஞாழன் முலை > தகரமும் ஞாழலும் கூடி உண்டாகிய
சாந்தையணிந்த முலையினை
உடையாள் என விரிவடையும்.

கூடுதல் விளக்கம்:





துடியிடை என்றால் துடி போன்ற இடை என்று மட்டும்தான்
பொருள்; ஆடினாள் எனும் முடிக்கும் சொல்
இருந்தால்தான் ஆடியவள் பெண் என்பதனை
அறிய முடியும். இதுவே உவமைத் தொகைக்கும்
உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகைக்கும் உள்ள வேறுபாடு.

     கவி இலக்கணம் என்று மட்டும் இருந்தால் கவிக்கு இலக்கணம் என நான்காம்
வேற்றுமைத் தொகையாக மட்டுமே நோக்க இயலும். கவி இலக்கணம் படித்தான்
என்று இருந்தால்தான், கவி இலக்கணம் அறிவிக்கும் நூலைப் படித்தான் எனும்
பொருள் ஏற்படும்; அதன் பின்னர்தான் அது நான்காம் வேற்றுமைத்தொகைப்
புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.
  • இவ்வண்ணமே ஒவ்வொன்றையும் நோக்குக. குறுந்தாடி வந்தான் (பண்புத்தொகைப் புறத்து)
    இரட்டைச்சடை சென்றாள் (பண்புத்தொகைப் புறத்து)