பக்கம் எண் :

தொகைகள்68கி. செம்பியன்

  • ஆகுபெயர் ஒன்றன் பெயரால் அதனோடியையு பற்றிய பிறிதொன்றை உயர்த்தி
    ஒருமொழியிடத்து வருவதாம்; அன்மொழித்தொகை இயைபு வேண்டாது
    இருமொழியும் தொக்க தொகையாற்றலினாலே பிறிது பொருள் உணர்த்தி
    இருமொழியிடத்து வருவதாம்.
1. பூங்குழல் வந்தாள்




> பூவையுடைய குழலினை
உடையாள் வந்தாள் என
விரிவடைந்து, இரண்டாம்
வேற்றுமைத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.
பொற்றொடி நின்றாள் > மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த
கவியிலக்கணம் படித்தேன் > நான்காம் வேற்றுமைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை;
இது கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட
நூல் என விரியும்.
கிள்ளிகுடி > கிள்ளியினது குடியிருக்கும்
ஊர் என விரிந்து ஆறாம்
வேற்றுமை புறத்துப் பிறந்ததாகும்.
கீழ்வயிற்றுக் கழலை சென்றான் > ஏழாம் வேற்றுமைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை;
கீழ்வயிற்றின்கண்எழுந்த கழலை
போல்வான் சென்றான் என விரியும்.
2, தாழ்குழல் பாடினாள்


> வினைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை; தாழ்ந்த
குழலையுடைய பெண் பாடினாள் என விரியும்.