பக்கம் எண் :

தொகைகள்67கி. செம்பியன்

15. அன்மொழித்தொகை (அல்வழிப்புணர்ச்சி)

      அன்மொழி என்பதை அல்+மொழி எனப் பிரிக்க வேண்டும்; அல்-அல்லாத;
மொழி-சொல்; எனவே, சொல் அல்லாத இடத்தில் பொருள் கிடைக்கும்; சொல்
இருந்தால்தானே பொருள் கிடைக்கும்.
பொற்றொடி வந்தாள்
முதலில் பெற்றொடி என்பது பொன்னாலாகிய தொடி என மூன்றாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகும்; மீண்டும் இதனை வந்தாள் எனும்
முடிக்கும் சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் 'அணிந்த பெண்' வந்தாள் என்பது
தெரியவரும். பொன், தொடி, வந்தாள் ஆகிய மூன்று சொற்களுக்கும் அப்பாற்பட்டுப்
'பெண்' எனும் சொல்லிலே பொருள் நிற்பதால், 'பெண்' எனும் சொல் அன்மொழி;
அந்த அன்மொழி மறைந்து வருவதால் அன்மொழித் தொகை.

      தொல்காப்பியர், பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றமைத் தொகை
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அன்மொழித்தொகை பிறக்கும் என்றார்.
உவமைத்தொகையையும்
வினைத்தொகையையும்
சேர்க்கவில்லை; இருப்பினும் சேனாவரையர் இந்த இரண்டின் வாயிலாகவும் பிறக்கும்
என்று விளக்கம் கண்டுள்ளார். இச்செய்திகளை மனத்துட்கொண்டு நன்னூலார்
'ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி' என நூற்பா செய்துள்ளார்.
எனவே, அன்மொழித் தொகைக்கு ஒரு தொகை தேவையாகிறது; இது தொகைக்கு
பிறக்கும் தொகை!

  • பெரும்பாலும் வாக்கியமாக இருந்தாலன்றி அன்மொழித் தொகை என்று
    அறிந்துகொள்வது இயலாது - அ.கி. பரந்தாமனார்.

  • தொகைச் சொற்களின் ஆற்றலால் அச்சொற்களுக்குத் தொடர்பில்லாமலும்,
    பிறிதொரு பெயரைக்கொண்டு பொருள் தருமாறு அமையும் சொற்றொடர்க்கு
    அன்மொழித்தொகை எனப் பெயர்-புலவர் த. கோடப்பிள்ளை