பக்கம் எண் :

தொகைகள்66கி. செம்பியன்

  • இருபது, முப்பது என்று வந்தால் இரண்டு ஆகிய பத்து, மூன்று ஆகிய பத்து
    எனப் பண்புத்தொகையாம்.

  • முப்பத்து மூன்று, நாற்பத்து நான்கு, ஆயிரத்து முந்நூற்று முப்பது என்று வந்தால்
    முப்பதும் மூன்றும், நாற்பதும் நான்கும், ஆயிரத்து முந்நூறும் முப்பதும் என
    ஆகிய உம்மைத் தொகையாகும்.

  • தெற்கே வடக்கு, கிழக்கே மேற்கு என்று வந்தால் உம்மைத் தொகை.

  • வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்று வந்தால் வடக்கு ஆகிய
    கிழக்கு, வடக்கு ஆகிய மேற்கு, தெற்கு ஆகிய கிழக்கு, தெற்கு ஆகிய மேற்கு
    என்றாகிப் பண்புத்தொகையாகும்.