- கபிலபரணர், சேரசோழபாண்டியர், புலிவிற்கெண்டை என்றல் தொடக்கத்து
உம்மைத் தொகைகளிலே அனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன.
- பூங்குழல், உயிர்மெய் என்றல் தொடக்கத்து அன்மொழித் தொகைகளிலே,
சொல்லுவோனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருள் மேலது ஆகாது,
இவ்விரு மொழியும் அல்லாத உடையாள் முதலிய புறமொழிப் பொருள் மேலது
ஆதலால், அப்புற மொழிகளில் பொருள் சிறந்தன.
- நன்னூல் காண்டிகை உரை
- "வல்லொற்று வரினே இடத்தொகை யாகும்
மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்"
- நன்னூல்-371
1. வடுகக்கண்ணன் |
> |
இது வடுகநாட்டில் பிறந்த கண்ணன்
என விரியும். |
வடுகங்கண்ணன் |
> |
இது வடுகனாகிய கண்ணன் என்றாயினும்,
வடுகனுக்கு மகனாகிய கண்ணன் என்றாயினும் விரியும் |
2. துளுவச்சாத்தன் |
> |
இது துளுவநாட்டிற் பிறந்த சாத்தன் என விரியும். |
துளுவஞ்சாத்தான் |
> |
இது துளுவனாகிய சாத்தன் என்றாயினும்,
துளுவனுக்கு மகனாகிய சாத்தன் என்றாயினும் விரியும்
- நன்னூல் காண்டிகை உரை
|
- உம்மைத் தொகை உயர்திணையாக அமைந்தால் பலர்பால் ஈறாக
முடிக்கவேண்டும் (கபிலபரணர், சேரசோழ பாண்டியர்); உம்மைத்தொகை
அஃறிணையாக இருந்தால், பலவின்பாலாக முடிக்க வேண்டிய நியதி இல்லை.
உண்மை இன்மைகள் (அல்லது) உண்மை இன்மை
இராப்பகல்கள் (அல்லது)இராப்பகல்
|
|
|
|