பக்கம் எண் :

தொகைகள்72கி. செம்பியன்

  • உருபுகள் மறைந்து தொகையாக வரும்போது இரண்டாம் வேற்றுமை முதலாக ஏழாம்
    வேற்றுமை ஈறாகப் பொருள்களால் மயங்கிவரும். நன்னூல்-373.
1. தெய்வ வணக்கம்


> தெய்வத்தை வணங்கும் வணக்கம்,
தெய்வத்துக்கு வணக்கம் என இரு
பொருள்களினாலே மயங்கியது.
2. தற்சேர்ந்தார் > தன்னைச் சேர்ந்தார், தன்னொடு
சேர்ந்தால் தன்கட் சேர்ந்தார் என
மூன்று பொருள்களினாலே மயங்கியது.
3. சொல்லிணக்கணம் > சொல்லினது இலக்கணம், சொற்
கிலக்கணம், சொல்லின்கண்
இலக்கணம், சொல்லினது
இலக்கணம் சொன்ன நூல்
(அன்மொழித் தொகை) என நான்கு
பொருள்களினாலே மயங்கியது.
4. பொன்மணி > பொன்னாலாகிய மணி
பொன்னாகிய மணி
பொன்னின்கண் மணி
பொன்னொடு சேர்ந்த மணி
பொன்னும்மணியும் என ஐந்து
பொருள்களினாலே மயங்கியது
5. மரவேலி > மரத்தைக் காக்கும் வேலி
மரத்திற்கு வேலி
மரத்தினது வேலி
மரத்தின் புறத்து வேலி
மரத்தால் ஆகிய வேலி
மரமாகிய வேலி என ஆறு
பொருள்களினாலே மயங்கியது