6. சொற்பொருள்
|
>
|
சொல்லால் அறியப்படும் பொருள்
சொல்லினது பொருள்
சொற்குப் பொருள்
சொல்லின்கட் பொருள்
சொல்லும் பொருளும்
சொல்லாகிய பொருள்
சொல்லானது பொருள் என
ஏழு பொருள்களினாலே மயங்கியது
'சொல்லானது பொருள்' என்றது தொகாநிலைப்
பொருளாகிய எழுவாய்த் தொடர் |
7. புலிகொல்யானை |
> |
புலியைக் கொன்ற யானை
புலியானது கொன்ற யானை
புலியினாலே கொல்லப்பட்ட யானை என
மூன்று பொருள்களினாலே மயங்கியது. |
- நன்னூல், காண்டிகையுரை, நூற்பா - 373.
' 'எல்லாச் சொல்லும் ஒருசொல் நடைய' என்பது தொல்காப்பிய நூற்பா. (தொல்.
சொல். நூ- 24) அறுவகைத் தொகைச் சொற்களும் ஒரு சொல்லாய்
நடத்தலையுடையன என்பது இதன் பொருள்;
யானைக்கோடு = பெயர்ச்சொல் + பெயர்ச்சொல்
கொல்யானை = வினைச்சொல் + பெயர்ச்சொல்
ஒரு தொகையில் இரண்டு சொற்கள் இடம் பெற்றிருந்தாலும், அவை புணர்ந்தபின்
ஒரு சொல்லாய் இயங்கும். யானைக்கோடு, கொல்யானை ஆகியவற்றுள் முடிவுச்
சொற்களாய்க் கோடு, யானை எனும் பெயர்ச் சொற்கள் நிற்கின்றன. இப்போது இவை
(யானைக் கோடு, கொல்யானை என்பவை) பெயர்ச்சொற்களுக்கு உரிய தகுதியைப்
பெறும். பெயர்ச்சொற்களின் தகுதிகளாவன இரண்டு:
1. உருபினை ஏற்றல் > யானைக்கோடு + ஐ = யானைக் கோட்டை
கொல்யானை + ஐ = கொல்யானையை
|
|
|
|