அதே பேருந்து நிலையத்தில்
நின்றுகொண்டு மதுரைக்குச் செல்ல வேண்டிய
பேருந்தை எதிர்பார்த்து, அது வந்தபோது
மதுரைப் பேருந்து வந்துவிட்டது
என்றுதானே சொல்வார்! அப்போது,
மதுரைக்குச் செல்லும் பேருந்து
என்று பொருள்.
4-ஆம்.வே.உ.ப.உ.தொ.தொகை
புலம்-3
குடத்துப்பால், குளத்துநீர், தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்,
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மாறோக்கத்து நப்பசலையார், மடத்துச்
சாமியார், (பெரிய) இடத்துப் பெண் முதலான தொடர்களை நோக்குக.
குடத்துப்பால் > குடத்தின்கண் உள்ள பால் 7-ஆம். வே.உ.ப.உ.தொ.தொகை.
குடம் + அத்து + இன் + கண்
அத்து, இன் ஆகியன சாரியைகள்
குடத்து என்பதிலே உள்ள 'அத்து' ச் சாரியைப் பொருளுக்குச் சென்றது.
தலையாலங்கானத்து என்பதிலே உள்ள 'அத்து' ம் அப்படித்தான்.
தலையாலங்கானத்தின்கண் நிகழ்ந்த போரில் (செரு) வென்ற நெடுஞ்செழியன் என்று
பொருள். மற்றவைகளுக்கும் இவ்வண்ணம் இடப்பொருள் கொள்க.
சாரியை மட்டும் பெற்று உருபு பெறாமல் வந்திருந்தால்
அவையும் தொகைதாம்.
புலம்-4
தொகைகளும் ஒற்றெழுத்தும்
ஒற்றொழுத்தை மிகுப்பதாலும் மிகுக்காமலிருப்பதாலும் பொருள்மாறுபடும்;
அதனால் தொகைகளும் வேறுபடும். கவனம் தேவை; பயிற்சி வேண்டும்.
|
|
|
|