பக்கம் எண் :

114நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


5.7

பொது இயல்

வழக்கு
(Usage)

வழக்காவது உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும்
வழங்கப்படும் சொற்களின் முறையாகும். இவ்வழக்கானது இயல்பு
வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்.

இயல்பு வழக்கு
(Natural Usage)

இயல்பு வழக்காவது, ஒரு பொருளுக்கு இயல்பாய் அமைந்த
சொல்லால் அப்பொருளைக் கூறுவது. இவ்வழக்கானது
இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என
மூவகைப்படும்.

1. இலக்கணமுடையது (Grammatical Form) என்பது
இலக்கண அமைதி வழுவாமல் வழங்குவது.

ஞாயிறு, இல்வாய், மிஞிறு, கோவில்.

2. இலக்கணப் போலி (Apparent Grammatical Form)
மாறியிருப்பதை இலக்கணத்துக்கு உரியது போல வழங்கிவருவது

வாயில், ஞிமிறு, கோயில்.

இல்வாய் என்பது வாயில் என்றும்,

மிஞிறு என்பது ஞிமிறு என்றும்,

கோவில் என்பது கோயில் என்றும் மாறி வரினும் இவை
இலக்கணமுடையது போல ஒப்புக் கொள்ளப்பட்டன.