|
கோவில் என்றெழுதினாலும் கோயில் என்றெழுதினாலும்
இவ்விரண்டும் ஒப்புக் கொள்ளப்படும் ஆனால், ஒரு கட்டுரையில்
கோயில் என்பதைப் பயன்படுத்தினால் அக்கட்டுரை முழுதும் கோயில்
என்பதே பயன்படுத்தப்படல் வேண்டும். கோவி்ல் என்பதைப்
பயன்படுத்தினால் கோவில் என்பதையே பயன்படுத்துக.
3. மரூஉ
(Corrupt Forms) என்பது சொற்கள் சிறிது சிதைந்தும்
திரிந்தும் தொன்றுதொட்டு வழங்குவது.
யானை - ஆனை யாண்டு - ஆண்டு
யார் - ஆர் யாறு - ஆறு
தஞ்சாவூர் - தஞ்சை
சோழநாடு - சோணாடு
பொழுது - போழ்து, போது.
அருமருந்து அன்ன பிள்ளை -அருமந்த பிள்ளை
தகுதி வழக்கு (Appropriate Usage)
தகுதி வழக்காவது ஒரு பொருளுக்கு இயல்பாய் அமைந்த
சொல்லை ஏதேனும் ஒரு காரணம் பற்றி நீக்கித் தகுதியான
வேறொரு சொல்லால் அப்பொருளைக் கூறுவது. இத்தகுதி வழக்கமானது
இடக்கர் அடக்கல், மங்கலம், குழுஉக்குறி என மூவகைப்படும்.
1. இடக்கர் அடக்கல் (Decent Form)
சொல்லத் தகாத சொற்களை மறைத்து வேறு முறையில்
சொல்வது இடக்கர் அடக்கல் எனப்படும்.
கால் கழுவி வந்தேன். - பவ்வீ (மலம்)
தலைக்குறை கமலம் - (மலம்)
முதல் எழுத்துக் குறைந்த கமலம். க என்னும் எழுத்தை நீக்கினால்
என்ன வரும்? இது மலம் என்னும் சொல்லைக் குறிக்கிறது.
|