2. மங்கலம் (Euphemism)
அமங்கலமான சொற்களை மங்கலமான சொற்களால் கூறுவது.
சுடுகாடு என்பதை நன்காடு என்றும்,
காராடு என்பதை வெள்ளாடு என்றும்
வழங்குவது மங்கல வழக்கு.
3. குழுஉக்குறி (Conventional Form)
இது பிறர் அறியாத படி ஒரு கூட்டத்தாருக்குள் வழங்கிவரும்
குறிப்புச் சொல்.
பிஞ்சு வெள்ளை - 12 பைசா
வெள்ளைக் குதிரை - கள்.
பிஞ்சு வெள்ளை தள்ளிப்போடு என்பர் வணிகர். கள்
குடித்திருப்பவனை ஒரு சிலர் வெள்ளைக் குதிரை மேல் இவர்
ஏறியிருக்கிறார் என்பர்.
பலருக்கும் தெரிந்து விட்டால் இது குழுஉக்குறியாகாது.
இவை மூன்றும் தகுதி வழக்கு எனப்படும். சொல்லத்தகாத
சொற்களை ஒழித்து அவற்றிற்குத் தகுதியான சொற்களை வழங்குவதால்
தகுதி வழக்கு என்பர்.
பால்வழு அமைதி
மரியாதையாலோ உயர்வினாலோ ஒரு பாலுக்கு வேறு பால்
வருமானால், அதைத் தவறு என்று கருதாது ஒப்புக்கொள்வது பால்வழு
அமைதி.
தந்தை வந்தான், ஆசிரியன் கூறினான், ஒளவை பாடினாள்
என்று சொல்வது மரியாதையாகுமா? ஆகாது. ஆதலால், தந்தை
வந்தார் என்றும், ஆசிரியர் கூறினார் என்றும், ஒளவையார்
|