பக்கம் எண் :

பொது இயல் 117


பாடினார் என்றும் கூறுகிறோம். இப்படி ஒரு பாலுக்கு மற்றொரு பால்
வருமாறு கூறுவதைப் பால்வழு அமைதி என்பர்.

மரபு (Classical Usage)

பெரியோர் எந்தச் செல்லை எப்படி வழங்கினாரோ அந்தச்
சொல்லை அப்படியே நாமும் வழங்குதல் மரபாகும்.

விலங்குகளில் இளமைப் பெயர்கள்

எலிக்குஞ்சு
கீரிப்பிள்ளை
பசுக்கன்று
பன்றிக்குட்டி
மான்கன்று
யானைக்கன்று
எருமைக்கன்று
அணிற்பிள்ளை
கழுதைக்குட்டி
குதிரைக்குட்டி
நாய்க்குட்டி
புலிக்குட்டி
பூனைக்குட்டி
சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டி

விலங்கின் இருப்பிடமும் விலங்கின் மலமும்

கோழிப் பண்ணை
ஆட்டுப் பட்டி
மாட்டுத் தொழுவம்
குதிரைக் கொட்டில்
யானைக் கூடம்
மாட்டுச் சாணம்
ஆட்டுப் பிழுக்கை
குதிரை இலத்தி
யானை இலண்டம்
பறவை எச்சம்

தாவர உறுப்புப் பெயர்கள்

கேழ்வரகுத் தட்டை
சோளத் தட்டை
கம்பந் தட்டை
தாழை மடல்
தென்னை ஓலை
வாழையிலை
வேப்பந்தழை
மூங்கில் இலை
முருங்கைக்கீரை
தினைத்தாள்