பக்கம் எண் :

118நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ஈச்சமர ஓலை
பனை ஓலை
மா இலை
பலா இலை
வெங்காயத்தாள்
நெல்தாள்
கமுகக்கூந்தல்
(கமுகம் - பாக்குமரம்)

காய்களின் இள நிலை

அவரைப்பிஞ்சு
கத்திரிப்பிஞ்சு
முருங்கைப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு
வாழைக்கச்சல்
மாவடு
தென்னங்குரும்பை
பலாப்பிஞ்சு

செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம்

பூஞ்சோலை
பூந்தோட்டம்
வாழைத்தோட்டம்
வெற்றிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்
கருப்பங்கொல்லை
(கரும்பு பயிராகும் வயல்)
கம்பங்கொல்லை
சோளக்கொல்லை
இலுப்பைமரத்தோப்பு
மாந்தோப்பு
முந்திரித்தோப்பு
சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு
ஆலங்காடு
(ஆல்-ஆலமரம்)
பலாத்தோப்பு
பனந்தோப்பு
வேலங்காடு
(வேல் - வேலமரம்)

பெருள்களின் தொகுப்பு

மாட்டு மந்தை
ஆட்டு மந்தை
உடுக்கணம்
(உடு-நட்சத்திரம்)
கற்குவியல்
சாவிக்கொத்து
சுள்ளிக்கற்றை
திராட்சைக்குலை