14. வலி மிகுதல் I
நல்ல தமிழ் எழுதுவது என்றால் என்ன பொருள்? அழகான
சொற்களை அணியணியாக அடுக்கிப் பிழையாக எழுதுவது என்று
பொருள்படுமா? இல்லை, பிழையற்ற தமிழில் இலக்கணமரபு குன்றாது
எழுதுவதுதான் நல்ல தமிழில் எழுதுவதாகும், பிழையோடு அழகாக எழுதுவது
மணமற்ற மலர் போலாகும், பிழைகள் மலிந்த அழகிய நூல்களுக்கு அறிஞர்
மதிப்புக் கிட்டுவதில்லை, பிழையற்ற நூல்களே மதிப்படையும்; நின்று நிலவும்,
பிழையுள்ளவை நாளடைவில் அழிந்து ஒழியும்,
வலி மிகுதல் என்பது நல்ல தமிழ் எழுத விரும்புவோர்
அறிந்துகொள்ள வேண்டுவனவற்றுள் ஒன்று, ‘வலி மிகுதல்’ என்பது பற்றிச்
சிந்தித்தால் தலைவலி மிகும் என்று எண்ணிவிட வேண்டுவதில்லை,
வல்லெழுத்து மிகுந்து வருதலையே இலக்கணத்தில் சுருக்கமாக வலிமிகுதல்
என்பர், வலி மிகுதலால் பொருள் வேறுபாடு தெரியும் இன்னோசை உண்டாகும்,
‘செடிகொடி’ என்னும் தொடருக்கும் ‘செடிக்கொடி’ என்னும் தொடருக்கும்
வேறுபாடு உண்டு. செடி கொடி என்னும்தொடருக்குச் செடியும் கொடியும்
என்பது பொருள், செடிக்கொடி என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள கொடி
என்றே பொருள் தரும், திரைக்கடல் என்னும் சொற்றொடர்க்குக் திரையையுடைய
கடல் என்று பொருள் காணவேண்டும், திரை அலை, ‘தந்த பலகை’
என்னும் தொடர்க்கும், ‘தந்தப் பலகை என்னும் தொடர்க்கும் முறையே
கொடுத்த பலகை என்றும், தந்தத்தால் ஆன பலகை’ என்றும் பொருள்
ஏற்படும், ‘பெண்மையுடைய பெண்களெலாம்,’ ‘பெண்மையுடையப்
பெண்களெலாம்’ ஆகிய இவ்விரண்டு தொடர்
களையும் பாருங்கள், முதலாவது தொடரானது பெண் தன்மையுள்ள
பெண்களெலாம் என்று பொருள் தருகிறது. இரண்டாவது தொடர் பெண் தன்மை
ஒழிந்து போக இருக்கும் பெண்களெல்லாம் எனப் பொருள் கொடுக்கிறது,
இங்கு இவற்றை எடுத்துக்காட்டியதனால் அறிவது யாது? இலக்கண அறிவு இருந்தால்தான் சொற்றொடர்களின் பொருளை
நன்குணர்ந்துகொள்ள முடியும்
என்பது புலனாகும், எனவே, நம் முன்னோர்கள் புணர்ச்சி இலக்கண அறிவை
மொழித்தேர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத தாய் வற்புறுத்தியுள்ளார்கள்,
வாழை பழம் என்றால் நன்றாயிருக்குமா? அறிஞர்கள் இப்படி
எழுதுவதைக் கண்டு நகைக்க மாட்டார்களா? வாழைப்பழம் என்றால்தான்
தமிழுக்குரிய இனிய ஓசையை அச் சொற்றொடரில் காணலாம்,
போதுமான தமிழ்க்கல்வி இல்லாதவர்கள் எழுதும் நூல்களில், வலி
மிகவேண்டிய இடத்தில் வலிமிகாமல் இருக்கிற பிழைகள் மலிந்து கிடக்கின்றன,
ரயில் நிலைய அறிவிப்புகளிலும். வேறு இடங்களில் காணப்படும் அறிவிப்புப்
பலகைகளிலும் இப்பிழைகளை மிகுதியாகக் காண்கிறோம், தமிழ்
நாளிதழ்களிலோ. தமிழ் வார இதழ்களிலோ இப்பிழைகள் மலிந்திருப்பதைப்
பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை, இங்ஙனம் அங்கும் இங்கும் எங்கும்
பிழைகளே மிகுந்திருத்தலைக் காணலாம், ஆங்கில இதழ்களிலோ பிழைகள
மிகுந்திருக்கக் காண்பதில்லை, தமிழ் செய்த தவக்குறையோ என்னவோ
தமிழ் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் எழுத்தாளர் பலர் நூல்களிலும்
இப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன, காரணம் மொழித் தேர்ச்சியற்றவர்கள்
எழுதுவதே யாகும்,
பல மொழிகளை ஆய்ந்தறிந்த மொழிநூலாசிரியர் ஆட்டோ
யெஸ்பர்சன் என்பவர், ‘ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்றால், பல
சொற்களை அடுக்கி எழுதப் படித்துக்கொள்வது மட்டுமாகாது எந்த மொழியைக்
கற்கிறார்களோ