பக்கம் எண் :

208நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


அந்த மொழிக்கு உரிய இலக்கண முறைப்படி மரபுதவறாது சொற்களைச்
சேர்த்தெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும், இது யாருக்கும் இயற்கையாக
உண்டாகாது, இயற்கையாக வர வேண்டுமென்றால் அளவு கடந்த உழைப்பு
வேண்டுவதாகும்’ என்கிறார், அவர் கூறுவது மிகமிக உண்மை,

‘வல்லெழுத்து மிகுவது ஏன் வேண்டும்?’ என்று வினவலாம்
பொருளைத் தெளிவாகவும் சரியாவும் உணர்வதற்கும். தமிழ் மொழிக்கே
உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இதைத் தெரிந்துகொள்ள
வேண்டும்,வலிமிகுதல் தமிழ்மொழியிலும் மலையாள மொழியிலும்
காணப்படுவதன்றி வேறு மொழிகளில் இல்லை என்று மொழி
நூலறிஞர்கள் கூறுகிறார்கள்,

‘சென்னை தமிழ்ச் சங்கம்’ ‘மதுரைச் தமிழ்ச் சங்கம்’ என்று எழுதுவது
தவறு, ‘சென்னைத் தமிழ்ச் சங்கம்’, மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றும் எழுத
வேண்டும்,

‘புது கல்வி திட்டம்’ என்று எழுதுவது பிழையாகும், புதுக்
கல்வித்திட்டம் என்று எழுத வேண்டும்,

‘குடும்பங்களை காப்பாற்ற’ என்று எழுதலாகாது, ‘குடும்பங்களைக்
காப்பாற்ற’ என்று எழுதுக,

வல்லெழுத்து மிகுதலை மிகமிக எளிதாகத் தெரிந்து கொள்ளும்படி
சில விதிகள் கீழே தரப்படுகின்றன, அவை வருமாறு

1, அ,இ,எ; அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு,
யாங்கு; அப்படி, இப்படி எப்படி; ஆண்டு (இடம்) ஈண்டு, யாண்டு அவ்வகை,
இவ்வகை, எவ்வகை; அத்துணை, இத்துணை, எத்துணை; இனி, தனி, அன்றி,
இன்றி மற்ற, மற்றை, நடு, பொது, அணு, முழு, புது, திரு, அரை, பாதி எட்டு,
பத்து, முன்னர், பின்னர் ஆகிய இவை நிலைமொழியாக, அஃதாவது முதலில்
நிற்கும் சொல்லாக இந்து, ‘க’ ‘ச’ ‘ப’ என்னும் எழுத்துகளுள்,

எது வருமொழி முதலாக வந்தாலும் வல்லெழுத்தானது கட்டாயம் மிகும்,
‘க’ என்றால் க முதல் கௌ வரையிலுமுள்ள எழுத்துகளைக் கொள்க,
வருமொழி முதலில் அஃதாவது அடுத்து வரும் சொல்லின் முதலில் ச. த. ப
வருக்கம் வந்தால்தான் வல்லெழுத்துமிகும் உயிரெழுத்து வந்தால் மிகாது,
க,ச,த,ப வருக்கம் தவிர வேறு எழுத்துகள் வரினும் மிகாது, அ+பக்கம் =
அப்பக்கம் என்றெழுதுக,

இவ்வெடுத்துக்காட்டுகளைக் காண்க
அக்குடம் அத்துணைப் பெரிய
இச்செடி இத்துணைச் சிறிய
எப் பக்கம் எத்துணைப் பாடல்கள்
அந்தச் செடி இனிப் பேசேன்
இந்தக் குழந்தை தனிக் குடிசை
எந்தப் பாடம்? அஃதன்றிக் கொடேன்
அங்குச் சென்றான் இன்றிச் செல்லேன்
இங்குப் போகாதே மற்றப் பிள்ளைகள்
எங்குக் கேட்டாய்? மற்றைக் குறிப்புகள்
ஆங்குச் சென்றான் நடுக் கடல், நடுத் தெரு
ஈங்குக் கொடுத்தான் அணுக் குண்டு
யாங்குச் சென்றாய்? பொதுக் கூட்டம்
அப்படிப் பேசு முழுப் பக்கம்
இப்படிச் சொல் புதுக்கல்வி. புதுப்பொருள்
எப்படித் தந்தாய்? திருக்குறள், திருக்குளம்
ஆண்டுப் போனேன் அரைப் பக்கம்
ஈண்டுத் தந்தேன் பாதித்துணி
யாண்டுத் தந்தேன் எட்டுக் குழந்தைகள்
அவ்வகைக் கொடி பத்துச் செடிகள்
இவ்வகைப் பூக்கள் முன்னர்க் கண்டேன்
எவ்வகைச் செடி? பின்னர்ப் பேசுவேன்